ரவி மோகனுக்கு ஆப்பு வச்சிட்டாரே வெற்றிமாறன்!.. பாவம் இப்பதான் ஆரம்பிச்சாரு!…

Ravi Mohan: திரைத்துறையில் நடிகனாக இருப்பது நிம்மதி மட்டுமில்லை. வசதியானதும் கூட. ஏனெனில் ஒரு படம் சூப்பர் ஹிட் அடித்து விட்டால் அந்த ஹீரோயின் சம்பளம் பல மடங்கு உயரும். அதுவே தோற்றுவிட்டால் அது தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துமே தவிர நடிகரை ஒன்றும் பாதிக்காது. எனவே பெரும்பாலான நடிகர்கள் எதற்கு ரிஸ்க் என தயாரிப்பில் இறங்க மாட்டார்கள். வெகு சில நடிகர்கள் மட்டுமே தயாரிக்க முன் வருவார்கள்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை கமல், சூர்யா, தனுஷ், விஷால், விஷ்ணு விஷால், சிவகார்த்திகேயன் போன்ற சில நடிகர்கள் மட்டுமே தயாரிப்பாளர்களாக இருக்கிறார்கள். இயக்குனர்கள் தயாரிப்பாளராவதும் அவ்வப்போது நடக்கும். அதில் முக்கியமானவர் வெற்றிமாறன். இரண்டு தேசிய விருதுகளை வாங்கிய முக்கியமான இயக்குனர் இவர். இவர் தயாரித்த மனுஷி மற்றும் பேட் கேர்ள் ஆகிய இரண்டு திரைப்படங்களும் சென்சாரில் சிக்கி பல பிரச்சனைகளை சந்தித்தது.

#image_title

இந்த இரண்டு படங்களிலும் கிட்டத்தட்ட 20 கோடிகளை முதலீடு செய்திருக்கிறார் வெற்றிமாறன். ஆனால் பேட் கேர்ள் படத்தை வெளியிடவே முடியாதபடி பல பிரச்சனைகள் வந்தது. அதன்பின் நீதிமன்றத்தை அணுகி பல காட்சிகளை கட் செய்து வருகிற ஐந்தாம் தேதி படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெற்றிமாறன் இந்த படத்தோடு தனது தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக அறிவித்தார்.

இந்த இரண்டு படங்களிலும் அவர் சந்தித்த மன உளைச்சல் இனிமேல் சினிமாவே தயாரிக்க வேண்டாம் என்கிற முடிவுக்கு அவரை தள்ளி இருக்கிறது. இந்நிலையில்தான் இத்தனை வருடங்களாக நடிகராக இருந்த ஜெயம் ரவி தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். ரவி மோகன் புரடெக்‌ஷன் என்கிற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் துவங்கியிருக்கிறார். சமீபத்தில் இது தொடர்பான விழாவில் கார்த்தி, சிவ்ராஜ் குமார், யோகி பாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

brocode
brocode

ரவி மோகன் நிறுவனம் தற்போது இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளது. ப்ரோ கோட் என்கிற படத்தில் ரவி மோகனும், எஸ்.ஜே சூர்யாவும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் இப்படம் தொடர்பான வீடியோவும் வெளியானது. அதேபோல் யோகி பாபுவை வைத்து An Ordinary Man என்கிற படத்தையும் ரவி மோகனை இயக்கவிருக்கிறார்.

தயாரிப்பில் இறங்கிவிட்ட ரவி மோகன் பல ஃபைனான்சியர்களிடமும் பணம் கேட்டு வருகிறாராம். இதற்கு முன் ‘சரி சார்.. பணம் உங்களுக்கு கொடுக்கிறோம்’ என சொன்னவர்கள் கூட இப்போது ரவி மோகன் அவர்களை அணுகினால் ‘வெற்றிமாறனே தயாரிப்பு நிறுவனத்தை மூடுகிறார்.. இந்த நேரத்தில் நீங்கள் வந்து இருக்கீங்க.. கொஞ்சம் யோசிச்சு செய்ங்க’.. என ஒரு மாதிரி மழுப்பலாக பதில் சொல்கிறார்களாம். இப்படி வெற்றிமாறனின் முடிவு ரவி மோகனின் தயாரிப்பு கனவுக்கும் சிக்கலை உருவாக்கி இருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.