பக்காவா பிளான் போட்டும் இப்படி ஆகிப்போச்சே!.. ஜேசன் சஞ்சய் படத்தில் இதான் பிரச்சனை!..
Jason Sanjay: நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் அவருடன் ஒரு பாடலில் வந்து சிறிது நேரம் நடனமாடி இருப்பார். அதை பார்த்தது ரசிகர்கள் பின்னாளில் கண்டிப்பாக இவரும் சினிமாவுக்கு வருவார் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரும் அப்பாவைப் போல நடிகராகாமல் இயக்குனராக மாறிவிட்டார். பல இயக்குனர்கள் இவரை அறிமுகம் செய்ய முன்வந்தும் அதை மறுத்துவிட்டார். ஜேசன் லண்டனில் சினிமா தொடர்பான சில படிப்புகளை முடித்துவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்களை எடுத்தார்.
திடீரென ஒருநாள் லைக்கா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் ஒரு படம் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. ஜேசன் சஞ்சய்க்கு இயக்கம் பற்றி என்ன தெரியும்? ஒரு திரைப்படத்தை இயக்கும் அளவுக்கு அனுபவத்தை பெற்று விட்டாரா? என்றெல்லாம் பலரும் நினைத்தார்கள்.

ஒருபக்கம் அறிவிப்பு வெளியானதோடு சரி.. பல மாதங்கள் படம் பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதன்பின் இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவக நடிக்கிறார் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடிப்பதாக செய்திகள் வெளியானது. அதோடு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில்தான் படத்தை முடிக்க இன்னும் 8 கோடி தேவைப்படுவதாகவும் அதை லைக்கா நிறுவனம் கொடுக்காததால் ஷூட்டிங் பல நாட்களாக அப்படியே நிற்கிறது என சமீபத்தில் செய்திகள் வெளியானது.
ஆனால் அதை படக்குழு மறுத்திருக்கிறது. ஜேசன் சஞ்சய் என்ன பட்ஜெட் சொன்னாரோ அந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்து முடித்து விட்டார். இன்னும் ஒரு பாடல் மட்டுமே எடுக்க வேண்டி இருக்கிறது. அந்த பட்ஜெட்டை லைக்கா கொடுத்து விட்டால் அந்த ஒரு பாடலை ஜேசன் எடுத்து முடிவார். மற்றபடி கூறிய பட்ஜெட்டை விட அதிகமாக அவர் செலவு செய்யவில்லை ’என்றெல்லாம் இந்த படக்குழுவில் இருந்து சிலர் ஊடகங்கள் வழியே விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


