AR Murugadoss: நான் சொல்பேச்சு கேட்பேன்… எனக்கு அது வேண்டாம்… வைரலாகும் ஏ.ஆர்.முருகதாஸ் சம்பவம்!
AR Murugadoss: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போதைய கோலிவுட் படங்கள் செய்யும் தப்பை சரியாக சுட்டிக்காட்டி தன்னுடைய மதராஸி படத்தில் அது இருக்காது என திட்டவட்டமாக பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளிவரும் போதே அதற்கு சென்சார் சர்டிபிகேட் என்பது ரொம்பவே முக்கியம். அதில் ஏ சர்டிபிகேட் ஒரு படம் வாங்கிவிட்டால் அதற்கு குழந்தைகளும், 18 வயதுக்கு கீழ் இருக்கும் யாருமே திரையரங்கில் படம் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஆனால். தற்போது சினிமாக்கள் எல்லாமே வசூலை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. இதனால் குடும்ப ரசிகர்கள் திரையரங்குக்கு வரவில்லை என்றால் வசூல் பெரிய அளவில் அடிவிழும். இதனால் தயாரிப்பாளர்கள் தங்களுடைய பட்ஜெட்டை இழக்கவும் நேரிடும்.
கடைசியாக தமிழ் சினிமாவின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது கூலி திரைப்படம். 1000 கோடி வசூல் அடிக்கும் என பேச்சுகள் இருந்தது. அதற்கு முன்னர் ரஜினி -நெல்சன் கூட்டணியில் ரிலீஸான ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கும் அதிக வசூல் குவித்தது.
இதில் பெரிய அளவு லாபம் பெற்றது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதனால் நெல்சன், ரஜினிகாந்த் மற்றும் அனிருத்துக்கு காரை பரிசாக கொடுத்தது. ஆனால் கூலி திரைப்படம் முதல் காட்சியில் இருந்தே நெகட்டிவ் விமர்சனம் குவித்தது.

இது ஒரு பக்கம் இருக்க படத்திற்கு ஏ சென்சார் கொடுத்திருந்தனர். கொடுக்கப்பட்ட காட்சிகளை நீக்காமல் படத்திற்கு வேண்டும் என வைத்துக்கொண்டனர். அதனால் கிடைத்த ஏ சர்டிபிகேட்டால் 18 வயதுக்கு கீழ் யாரும் திரையரங்குக்கு வர முடியவில்லை.
இதனால் குடும்ப ரசிகர்களும் படத்தினை தியேட்டரில் பார்க்க முடியாமல் போனது. படத்தின் வசூலும் அடி வாங்கியது. இந்நிலையில் செப்டம்பர் 5ந் தேதி வெளியாக இருக்கிறது சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில், மதராஸி டிரெய்லர் ஏ சர்டிபிகேட் பெற்றது.
ஆனால் படத்துக்கு யூஏ சென்சார் பெற்றுள்ளது. சென்சார் கூறப்பட்டது போல சில காட்சிகளையும், ரத்த காட்சிகளையும் குறைத்து இருக்கிறோம். சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர்கள் சின்ன குழந்தைகளும், பெண்களும் தான்.
அதனால் எனக்கு ஏ சர்டிபிகேட் வேண்டாம். குடும்பம் இந்த படத்தை எஞ்சாய் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம் எனக் குறிப்பிட்டுள்ளார். இருந்தும் அமரன் திரைப்படம் பெற்றா வரவேற்பை இதுவரை மதராஸி பெறவில்லை. ரிலீஸுக்கு பின்னர் கதை சரியாக இருந்தால் படம் ஹிட்டடிக்கும் என்பதே குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


