என் ப்ரொடக்ஷன் கம்பெனியை மூட காரணமே.. வெற்றிமாறன் இவ்வளவு ஓபனா பேசிட்டாரே
தமிழ் சினிமாவின் முன்னணியில் இயக்குனர்களில் ஒருவர் வெற்றி மாறன். அவரின் உதவியாளர் வர்ஷா பரத் இயக்கியுள்ள திரைப்படம் தான் ”பேட் கேர்ள்”. இந்த படத்தை வெற்றி மாறனுடன் இணைந்து பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ளார். படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது, அதில் ஒரு டீனேஜ் பெண் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் இந்த உலகத்தில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகளை அவள் எப்படி எதிர்கொள்கிறாள்? அதை எப்படி பார்க்கிறாள்?.

அதை எப்படி அனுபவிக்கிறாள்? என்பதைப் பற்றி இப்படம் எடுத்துரைக்கிறது. இந்த படத்திற்கு பல எதிர்ப்புகளும் பல தடைகளும் வந்த நிலையில் ஒரு வழியாக இந்த படத்திற்கு விடிவு காலம் வந்துவிட்டது. இந்நிலையில் இந்த படத்தை தயாரித்த வெற்றிமாறன் ”நான் பேட் கேர்ள் திரைப்படத்துடன் என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை மூடி விடுவேன் திரைப்படத்தின் வணிகம் பாதிக்கப்படுவது தயாரிப்பாளருக்கு அழுத்தத்தை கொடுக்கிறது” என்று கூறியுள்ளார். இவர் நடத்தி வரும் ’கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ பல இளம் இயக்குனர்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
பேட் கேர்ள் பட ப்ரமோஷனில் கலந்துகொண்ட வெற்றி மாறன் இதைப் பற்றி பேசியுள்ளார் அப்பொழுது அவர் கூறுகையில்,” அடி வாங்கி டயர்டாக இருக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு திரும்ப வரேன்” என்று கூறியிருக்கிறார். சினிமா உலகில் நல்ல படங்களை தயாரிப்பதற்கு இன்று ஆட்கள் இல்லை.
வெற்றிமாறன் தயாரித்த ”மனுஷி” மற்றும் ”பேட் கேர்ள்” இரண்டு திரைப்படங்களும் நீதிமன்றங்களில் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளது. இதனால் மனம் உடைந்த வெற்றிமாறன் இனிமேல் படம் தயாரிக்கப் போவதில்லை என்று மனநிலைக்கு போய்விட்டார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


