Sivakarthikeyan: 17 வருட ரகசியத்தை போட்டுடைத்த சிவகார்த்திகேயன்! இதெல்லாம் சாத்தியமாப்பா?
Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் தற்போது விஜய் அஜித்துக்கு அடுத்தபடியான இடத்தில் இருக்கிறார். பல நடிகர்களின் இசை வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா என தொகுப்பாளராக இருந்து இன்று அதே முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் உயர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன்.
இது ஒரு அபார வளர்ச்சி என்றே பார்க்கப்படுகிறது. மிக குறுகிய காலத்தில் ஒரு முன்னணி அந்தஸ்தை அடைந்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அடுத்தடுத்த படங்களில் அவர் போடும் கடின உழைப்பும் முயற்சியும் தான். அவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் எப்பேர்பட்ட ஒரு வெற்றி படமாக அமைந்தது. அதோடு மக்கள் மனதில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது.
மேஜர் முகுந்த் வரதராஜனாகவே அந்த படத்தில் வாழ்ந்தார் சிவகார்த்திகேயன் என்று தான் சொல்ல வேண்டும். அந்த படத்தில் இருந்து அவருடைய மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்து விட்டது. அதன் பிறகு மதராஸி ,பராசக்தி என முன்னணி இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் நாளை அந்த படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றார்.
அதோடு படத்தின் ப்ரோமோஷன் வேளையிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். படத்தை பற்றி பல பேட்டிகளில் பேசி வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் 17 வருடமாக தன்னுடைய போன் சைலன்ட் மோடிலேயே இருப்பதாக சொல்லி இருக்கிறார். அவர் எப்போது தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தாரோ அதிலிருந்து இப்போது வரை தன்னுடைய போனை சைலன்ட் மோடில் வைத்திருப்பதாக சொல்லி இருக்கிறார்.
வைப்ரேஷனிலும் வைக்க மாட்டாராம். ஏனெனில் வைப்ரேஷன் மோடில் இருந்தால் சீக்கிரம் சார்ஜ் போய்விடும் என்பதற்காக சைலன்ட் மோடிலேயே வைத்திருக்கிறாராம். இதற்கிடையில் ஏதாவது எமர்ஜென்சி கால் என்றால் என்ன செய்வீர்கள் எனக் கேட்டபோது அது எப்படி எனக்கு தெரியும்? ஒரு ஆன்கர் ஆக இருந்து அதனுடைய வேலை எந்த அளவு முக்கியம் என்பதும் ஒரு பக்கம் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். நிறைய கால் வந்தாலும் அதில் இதுதான் எமர்ஜென்சி என யாருக்குமே தெரியாது என கூறி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


