sk பண்ண கேவலமான வேலை… என்னதான் முட்டுனாலும் அது நடக்காது..பிரபலம் நெத்தியடி

அமரன் படத்துக்கு பிறகு sk நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் மதராஸி. இந்த படத்தை முருகதாஸ் இயற்றியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த படம் ஏ ஆர் முருகதாஸுக்கு மிக மிக முக்கியமான படம் ஏனென்றால் அவர் ஒரு படம் ஹிட்டுக் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஏ ஆர் முருகதாஸ் ஒரு நேர்காணல் ஒன்றில் இந்த படம் கஜினி மாதிரி திரைக்கதையும் துப்பாக்கி மாதிரி ஆக்ஷன் காட்சிகள் கொண்ட படமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது இவர் பாமில் இல்லாதது இந்த படத்திற்கு மீதான எதிர்பார்ப்பை குறைத்துள்ளது.

#image_title

இதுவரை பெரிய அளவில் டிக்கெட் ப்ரீ புக்கிங் செய்யாமல் இருக்கிறது. மேலும் இந்த படத்திற்கான பிஸ்னஸ் அமரன் படத்தை விட குறைவாக தான் நடந்துள்ளதாம். சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக வேண்டுமென்றால் ஒரு ஆக்சன் ஹீரோவாக உருவாக வேண்டும். அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த படம் அமரன் அதனை தொடர்ந்து அடுத்த படியாக இருப்பது இந்த மதராஸி திரைப்படம் தான்.

இந்தப் படம் வெற்றியடையுமேயானால் சிவகார்த்திகேயன் ஒரு ஆக்சன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் முத்திரை பதிப்பார். இந்நிலையில் மூத்த பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான வலைப்பேச்சு பிஸ்மி சிவகார்த்திகேயனின் மறு முகத்தை காட்டியுள்ளார். அதில்,” மதராஸி படத்துக்கு பெரிய ஹைப் உருவாகவில்லை. ஆன்லைன் புக்கிங் ஓபன் செய்த பிறகும் தியேட்டர்களில் வரவேற்பு குறைவாகவே இருக்கிறது. முதலில் சிவகார்த்திகேயனை பொறுத்தவரை ஒரு ஸ்டாராக அவர் உருவானது கிடையாது”.

#image_title

”ஒரு ஸ்டாராக உருவாக்கப்பட்டார். ஆனால் இதை ஒரு தப்பாக சொல்ல முடியாது. இந்த இண்டஸ்ட்ரிக்கு இப்படி தான் இருக்க வேண்டும். சிவகார்த்திகேயன் இந்த அளவுக்கு உயர்ந்து இருப்பதற்கு காரணம் அவர் தன்னைத்தானே செல்ப் மார்க்கெட்டிங் செய்து கொண்டதுதான். அதற்கு முக்கிய காரணம் ஆர்.டி. ராஜா என்பவர் தான். அதனால்தான் மற்ற ஹீரோக்களை விட இன்று சிவகார்த்திகேயன் ஒரு படி மேலே இருக்கிறார்”.

”இவர்தான் அடுத்த விஜய் துப்பாக்கி இவர் கையில கொடுத்துட்டாரு. அந்த மாதிரி செய்திகள் எல்லம் ரசிகர்கள் ஆர்வக்கோளாறு காரணமாக பகிரப்பட்டது. மற்ற அனைத்து விஷயங்களை மேற்கொண்டது ”சிவகார்த்திகேயனின் ஐடி விங் செய்த வேலைதான்”. இந்த மாதிரி செய்திகளை பரப்பி மக்களின் மண்டைக்குள் திணிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் அதை நம்ப வைக்கும் முயற்சிதான் இது”.

“எல்லாவற்றிற்கும் மேல் பெருவாரியான மக்கள் என்ன முடிவு பண்றாங்க அப்படிங்கிறது தான் விஷயம். என்னதான் செய்திகளை பரப்பினாலும் மக்களும் அதை நம்பனும் மதராசி படத்தைப் பொறுத்தவரை மக்கள் அந்த மனநிலைக்கு வரவில்லை என்பதுதான் உண்மை”. இவ்வாறு கூறியுள்ளார்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.