Simbu: சிம்பு வெற்றிமாறன் பட அப்டேட்டா? தாணு போட்ட பதிவு.. மஜாவான ரசிகர்கள்
Simbu: மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்புவின் கால்ஷீட் கொஞ்சம் பிஸியாகி விட்டது என்றே சொல்லலாம். ஆனால் மாநாடு படம் கொடுத்த வெற்றி அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு, 10 தல போன்ற திரைப்படங்கள் கொடுக்கவில்லை. ஏன் கடைசியாக வெளியான தக் லைஃப் திரைப்படம் கூட எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. ஆனால் இந்த மூன்று படங்களுமே சிம்புவின் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்த படங்களாகவே பார்க்கப்பட்டது. மூன்று படங்களிலும் சிம்பு ஒரு ஆக்சன் ஹீரோவாகவே தெரிந்தார்.
ஆனால் ஒரு சரியான கம்பேக் சிம்புக்கு வர வேண்டும் என்று தான் அனைவரும் காத்திருக்கிறார்கள். கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அவர் நடிப்பதாக இருந்த படமும் தற்போது டிராப் செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் அவர் ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இதற்கிடையில் திடீரென ஒரு அறிவிப்பு வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஒரு பேரதிர்ச்சியாக மாறியது. அது வெற்றிமாறனுடன் சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்பதுதான்.
தனுஷுக்கு தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து இன்று ஒரு ஆக்ஷன் ஹீரோவாக தனுஷ் தெரிகிறார் என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணமாக வெற்றிமாறனை சொல்லலாம். அந்த வரிசையில் சிம்புவுக்கும் ஒரு தரமான ஆக்சன் படத்தை கொடுப்பார் என்று சிம்புவின் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். சிம்பு வெற்றிமாறன் இணையும் படத்தின் ப்ரோமோ வீடியோ கூட வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இப்படம் நடக்குமா? நடக்காதா என்பது தான் இப்போது ரசிகர்களின் கேள்வியாகவும் பார்க்கப்படுகிறது. இந்த படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. ஒரு சில பேர் படம் டிராப் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் வெற்றி மாறன், இந்தப் படம் புரொடக்ஷனில் இருக்கிறது என்று கூறினார், ஆனால் ஷூட்டிங் எங்கு நடக்கிறது என்பதை பற்றி இதுவரை தெரியவில்லை,
இந்த நிலையில் கலைபுலி எஸ் தாணு திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் வெறும் எமோஜி சிம்பலை போட்டு ரசிகர்களை வெறியேத்தி இருக்கிறார் தாணு. அதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் சிம்புவின் படத்தை பதிவிட்டு ‘சாமி வந்துருச்சு பண்டிகையை ஆரம்பிங்கடா’ என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இது கண்டிப்பாக சிம்பு வெற்றிமாறன் இணையும் படத்தின் அப்டேட் பற்றிய ஒரு அறிவிப்பாதான் இருக்கும் என சொல்கிறார்கள். ஏனெனில் தாணுவும் அடுத்ததாக சிம்பு வெற்றிமாறன் இணையும் படத்தை தான் தயாரிக்கிறார். அது சம்பந்தமான அப்டேட்டை தான் அவர் மறைமுகமாக இப்படி போட்டிருக்கிறார் என அனைவரும் கூறி வருகிறார்கள்.ஒரு வேளை இன்று மாலை கூட இந்தப் படத்தின் அப்டேட் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


