கூலி படத்தை காலி செய்த A சர்டிபிகேட்!.. முருகதாஸை பாத்து லோகேஷ் கத்துக்கணும்!..
Madharaasi: இப்போதெல்லாம் பெரும்பாலான திரைப்படங்கள் காதல் மற்றும் ஆக்சன் கலந்த கலவையாகவே உருவாகிறது. ஏனெனில் முன்பெல்லாம் காதல் படங்களில் வன்முறை காட்சிகள் இருக்காது. இப்போதெல்லாம் காதல் படங்களிலும் நான்கு சண்டை காட்சிகள் இருக்கிறது. ஏனெனில் சண்டைக் காட்சி இல்லாத படங்களை பெரும்பாலான ரசிகர்கள் விரும்புவதில்லை. அதோடு சண்டை காட்சிகள் மூலம் மாஸ் நடிகராக மாறலாம் என்கிற நம்பிக்கையும் நடிகர்களுக்கு இருக்கிறது. அதனால்தான் கே.ஜி.எப், ஆர்.ஆர்.ஆர், பாகுபலி, புஷ்பா போன்ற திரைப்படங்கள் வெளியாகி வசூலை அள்ளியது.
கமல் கூட விக்ரம் போன்ற கதைகளில் நடிக்க துவங்கி விட்டார். நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்த ரஜினி கூட ஜெயிலர் வெற்றிக்கு பின் மாறிவிட்டார். அவர் நடித்து வெளியான கூலி படத்தில் ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகள் இருந்தது. அதனால்தான் அப்படத்திற்கு சென்சார் போர்டு A சர்டிபிகேட் கொடுத்தது. ரஜினி படம் என்றால் குடும்பத்துடன் சென்று படம் பார்ப்பார்கள். ஆனால் கூலி படத்திற்கு A சர்டிபிகேட் என்பதால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை பல தியேட்டர்களில் தியேட்டர் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனாலே அப்படத்தின் வசூல் கணிசமாக குறைந்தது.
ஆனால் படத்திற்கு A சர்டிபிகேட் கிடைத்தபோது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதைபற்றி எந்த கவலையும் படவில்லை. சில காட்சிகளை வெட்டி நீக்கி இருந்தால் குறிப்பாக ரத்தம் தெறிக்கும் காட்சிகளை குறைத்திருந்தால் கண்டிப்பாக சென்சார் U/A சர்டிபிகேட் கொடுத்திருப்பார்கள். ஆனால் லோகேஷ் அதை செய்யவில்லை.

இந்நிலையில்தான் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் வருகிற 5ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கும் A சர்டிபிகேட் கிடைக்கும் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால் U/A சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘மதராஸி படத்தின் டிரெய்லருக்கு A சர்டிபிகேட் கொடுத்தார்கள்.
ஆனால் படத்திற்கு U/A கிடைத்தது. சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள், பெண்கள் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர்கள் குடும்பமாக வந்து படம் பார்ப்பார்கள். எனவே சென்சார் கேட்டபடி ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகளை குறைத்து விட்டோம். அதனால் படத்திற்கு U/A கிடைத்தது’ எனக் கூயிருக்கிறார்.
இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் போல லோகேஷ் யோசித்திருந்தால் கூலி படத்தின் வசூல் பாதித்திருக்காது. பலரும் குடும்பத்துடன் சென்று படத்தை பார்த்திருப்பார்கள் என ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


