Siragadikka Aasai: ரோகிணிக்கு ஆப்பு வைத்த கிரிஷ்… போதும்டா சாமி உங்க ரீல் அந்து போச்சு!

Siragadikka Aasai:  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

ஸ்கூலில் கிரிஷ் சோகமாக உட்கார்ந்து இருக்க மனதில் ஸ்கூல் அதிகாரி போலீஸை வர சொல்லி இருக்கேன் என்ற விஷயம் பயத்தை தருகிறது. இதனால் யோசிக்கும் கிரிஷ் உடனே ஓடி ஸ்கூலை விட்டு தப்பித்து விடுகிறான். வாட்ச்மேன் பின்னால் ஓடி துரத்த பார்க்க அவர் கையில் சிக்காமல் தப்பித்து விடுகிறான். 

அந்த நேரத்தில் முத்து தன்னுடைய கஸ்டமரை இறக்கிவிட்டு பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் லக்கேஜை எடுத்த போது டிக்கியை பூட்டாமல் விட முத்து கார் என தெரியாமல் கிரிஷ் அந்த காரின் டிக்கியில் வந்து படுத்து கொள்கிறான். 

வாட்ச்மேன் வந்து சின்ன பையன் எதுவும் பாத்தீங்களா எனக் கேட்க முத்து இல்லை எனச் சொல்லிவிடுகிறார். முத்து மீனாவிடம் பேசிவிட்டு அவரை அழைக்க வருவதாக சொல்கிறார். சரியாக முத்து வந்துவிட இருவரும் காரில் கிளம்புகின்றனர். 

ஸ்கூலில் இருந்து மகேஸ்வரிக்கு கால் செய்து கிரிஷ் செய்த விஷயத்தை சொல்லி அதில் அழைத்து மிரட்டினேன். அதனால் கிரிஷ் ஸ்கூலை விட்டு ஓடிவிட்டதாக சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார். மகேஸ்வரி ரோகிணிக்கு கால் செய்து கிரிஷ் ஓடி போன விஷயத்தை சொல்கிறார். 

ரோகிணி அதிர்ச்சியாக பாதுகாப்பாக இருக்கும் எனச் சொன்னாங்களே எனக் கேட்க ஸ்கூலில் ஒரு பையனை குத்தி ரத்தம் சிந்த வச்சிட்டானாம். அதுக்கு விசாரித்ததால் ஓடிப்போனதாக சொன்னதாக சொல்கிறார். ரோகிணி மகேஸ்வரியை ஸ்கூலுக்கு விசாரிக்க அழைக்கிறார். 

#image_title

மனோஜிடம் கஸ்டமரை பார்க்க போவதாக சொல்லிவிட்டு கிளம்புகிறார். முத்து சென்றுக்கொண்டு இருக்க காரில் ரோந்து போலீஸ் செக்கப் நடக்கிறது. முத்து என்ன விஷயம் எனக் கேட்க எதோ கொலையாளி பிணத்தை காரில் மறைத்து எடுத்துச்செல்வதாக சொல்கிறார்கள். 

அப்போ அங்கு அருண் இருக்க முத்து போச்சு அப்போ நம்ம மேல பழி விழும் எனக் கூற மீனா நாம என்ன செஞ்சோம் எனக் கேட்க அங்க பாரு அருண் இருக்கான். ஏற்கனவே காலையில் தான் சீதாவிடம் மாட்டிவிட்டோம். இப்போ இதுக்கு பழி வாங்குவான் என்கிறார். 

மீனா நீங்க அமைதியாக இருங்க எனக் கூறுகிறார். டிராபிக் கான்ஸ்டபிள் வந்து முத்து கார் டிக்கியை செக் செய்ய சொல்ல அருண் வேண்டாம் என்கிறார். ரோகிணி மகேஸுடன் வந்து ஸ்கூலில் விசாரிக்க கிரிஷ் ஓடிய விஷயத்தை சொல்லுகின்றனர். ஆனால் அவனுக்கு இங்கு இருக்கவே பிடிக்கலை. 

அதனால் தான் இப்படி நடந்துச்சு என்கிறார். எங்களுக்கு தெரிந்த டிடெக்டிவ் ஏஜென்சியில் சொல்லி இருக்கேன். கிரிஷை சீக்கிரம் கண்டுபிடிச்சு விடுவாங்க என்கிறார்கள். மகேஸ் என்னிடம் சொல்லி இருக்கலாமே எனக் கேட்க அவனை மிரட்டினால் பயந்து சரியா இருப்பானு நினைச்சேன் என்கிறார். 

முத்து மற்றும் மீனா காரில் சென்றுக்கொண்டு இருக்கும் போது பரமுவை வழியில் சந்திக்கின்றனர். ரோகிணி, முத்து மற்றும் மீனாவை கிரிஷ் தேடி போய் இருப்பானோ என யோசிக்கிறார். மகேஷ், மீனாவிடம் கால் செஞ்சு பேச சொல்ல ரோகிணியும் மீனாக்கு கால் செய்கிறார். எதோ காரியத்துக்காக தான் பார்லர் அம்மா நமக்கு கால் செய்யுது என்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.