மூன்று மாதத்தில் 20 கிலோ எடையைக் குறைத்த ரோஹித் ஷர்மா… வைரலாகும் புதிய தோற்றம்!
இந்திய அணியின் கேப்டன் (ஒருநாள் போட்டிகள்) ரோஹித் ஷர்மா டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது 38 வயதாகும் ரோஹித் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார். 2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதுதான் அவரின் தற்போதைய நோக்கமாக உள்ளது.
ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. ஏனென்றால் அப்போது அவருக்கு வயது நாற்பதாக இருக்கும். ரோஹித், கோலி போல உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் நபரும் அல்ல. இதனால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் தொடரோடு அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை தொடர்ந்து விளையாடுவதே அவரின் இலக்காக உள்ளது.
இந்நிலையில் அவர் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 20 கிலோ வரை எடைக் குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார். சமீபத்தில் அவர் பிசிசிஐ நடத்திய ‘யோ யோ’ தேர்விலிம் பாஸ் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


