பாக்யராஜ் மகள் தற்கொலை முயற்சி?.. அந்த நடிகர் காரணமா?.. குடும்பத்தில் ஏற்பட்ட களேபரம்..
தமிழ் சினிமாவை பொறுத்தவரை மட்டும் அல்ல இந்திய சினிமாவிலேயே சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்றால் அதில் கே. பாக்யராஜ் தனியிடம் பிடிப்பார். மக்களின் ரசனையை தெரிந்து அதற்கு ஏற்றார் போல் திரைக்கதை அமைக்கப்படுவதால் இவரின் படங்கள் தொடர் வெற்றி பெற்றது. நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பாக்யராஜுக்கு சாந்தனு என்ற மகனும் சரண்யா என்ற மகளும் இருக்கிறார்கள்.
பாக்கியராஜும் பூர்ணிமாவும் சினிமா பின்புலத்தை கொண்டிருந்ததால் தன்னுடைய பிள்ளைகளையும் சினிமாவில் பெரிய ஆளாக்க திட்டமிட்டு இருந்தார்கள். இதனால் தனது மகள் சரண்யாவை 2006 ஆம் ஆண்டு ”பாரிஜாதம்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார் பாக்யராஜ். மேலும் இந்த படத்தின் இயக்குனரும் இவர்தான். சரண்யாவுக்கு முதல் படத்திலேயே மலையாள நடிகர் பிரித்விராஜ் உடன் ஜோடி சேர்ந்தார்.

முதல் படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி மக்களின் கவனம் பெற்றார். மேலும் இந்த படத்தால் இயக்குனர் பாக்யராஜின் குடும்பத்தில் மிகப்பெரிய கலவரத்தை சந்தித்துள்ளது. அதை தமிழ்நாடு வாய்ஸ் நவ் யூடியூப் சேனலில் வெளியிட்டார் மூத்த பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் மேலும் அவர் கூறுகையில்,” பாரிஜாதம் படத்தில் நடிகை சரண்யாவுக்கும் பிரித்விராஜுக்கும் கெமிஸ்ட்ரி ஓவராக ஒர்க் ஆகிவிட்டது. நடிக்க சொன்னால் சரண்யா உண்மையாகவே பிரித்விராஜை காதலித்து விட்டார்”.
”ஆனால் இந்த காதல் கைகூடவில்லை. அடிப்படையில் பிரித்விராஜ் ஒரு மலையாள நடிகர் என்பதால் அவர்களின் கலாச்சாரம் என்பது வேறு. அவர்கள் மலையாள சமூகத்தை சேர்ந்தவர்களை தான் கல்யாணம் செய்வார்கள். மற்ற சமூகங்களுடன் அவர்களை பார்க்கவே முடியாது. அவர்களிடையே ஜாதி, மத வேறுபாடு கிடையாது. ஆனால் மலையாளம் பேசும் நபராக இருக்க வேண்டும் என்பது அவர்களின் குறிக்கோளாக இருக்கும்”.

”சரண்யா ஒரு தமிழ் பெண் என்பதால் பிரித்விராஜ் அவரின் காதலை ஏற்க மறுத்து விட்டார். இதனால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளான பாக்கியராஜ் மகள் சரண்யா சில தவறான முடிவுகளை மேற்கொண்டார். இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டது. பாக்யராஜ் அந்த சமயத்தில் ஒரு பத்திரிக்கை நடத்தி வந்தார். மேலும் படங்களையும் இயக்கி வந்தார் இதில் கவனம் செலுத்தி கொண்டிருந்ததால் குடும்ப பிரச்சினை அவரால் சமாளிக்க முடியவில்லை”.

”இருப்பினும் குடும்பமாக சேர்ந்து பேசி அவரை சமாதானப்படுத்தினர். அதன் பிறகு பாக்கியராஜ் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சரண்யா. இதுக்கு சரண்யாவின் பெற்றோர்களான பாக்கியராஜ், பூர்ணிமாவும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிறிது காலம் பேசாமல் இருந்தனர். அதன் பிறகு குழந்தை பிறந்தவுடன் மகளுடன் இணைந்து கொண்டார் பாக்யராஜ்”.
”மேலும் அந்த அசிஸ்டன்ட் டைரக்டரும் வாய்ப்புக்காக இன்னும் அலைந்து கொண்டுதான் இருக்கிறார். மாமனார் தான் உதவி செய்ய வேண்டும். இவரின் வாழ்க்கை இப்படி இருக்குது என்றால் மகன் சாந்தனுவின் வாழ்க்கையும் பாக்யராஜுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது என்றே சொல்லலாம். அவர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வரவேண்டும் என்பது பாக்யராஜின் ஆசை, ஆனால் இன்னும் தனக்கென தனி ஒரு இடத்தை பிடிக்க தடுமாறிக் கொண்டு வருகிறார்கள்”. என்று கூறியுள்ளார்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


