ஜேசன் சஞ்சய் படத்துக்கு இப்படி ஒரு சோதனையா? விஜய் மகனா இருந்தும் இப்படியா!..!..

Jason Sanjay: தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வந்தவர் இவர். இவரின் மகன் ஜேசன் சஞ்சய் பள்ளி படிப்பை சென்னையில் முடித்துவிட்டு தற்போது லண்டனில் அவரின் அம்மாவோடு வசித்து வருகிறார். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் அப்பா விஜயுடன் சேர்ந்து நடனம் ஆடினார். எனவே பின்னாளில் விஜய் போல இவரும் சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு.

லண்டனில் சினிமா தொடர்பான சில படிப்பை படித்த சஞ்சய் நண்பர்களோடு சேர்ந்து குறும்படங்களை எடுத்தார். அதன் பின் சினிமாவில் இயக்குனராக முடிவெடுத்து லைக்காவின் தயாரிப்பில் அவர் ஒரு படம் இயக்குவதாக சில வருடங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. விஜயின் மகன் இயக்குனரா என கோலிவுட் ஆச்சரியமாக பார்த்தது.

jason
Jason Sanjay

இந்தப் படத்தில் சந்தீப் கிஷன், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு ஷீட்டிங் நடந்து வந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் வெளியானது. ஆனால் தற்போது இந்த படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் ஷீட்டிங் நிறுத்தப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. முழு படத்தையும் முடிக்க இன்னும் 8 கோடி வேணும் என்கிற நிலையில் லைகா அந்த பணத்தை கொடுக்க வில்லையாம்.

ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில்தான் இந்த படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கி வந்தார். எனவே லைக்கா ஏற்கனவே பேசிய பணத்தை கொடுத்து அதற்கு மேல் இவர் அதிக செலவு செய்து பட்ஜெட்டில் 8 கோடி அதிகரித்துவிட்டதா இல்லை பேசிய பட்ஜெட்டில் இன்னும் 8 கோடியை லைக்கா கொடுக்கவில்லையா என்பது தெரியவில்லை. மொத்தத்தில் 8 கோடிக்காக ஷீட்டிங் அப்படியே நிற்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ஜேசன் சஞ்சயின் அப்பா விஜய் 250 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். ஆனால் அவரின் மகன் இயக்கும் ஒரு திரைப்படம் 8 கோடிக்காக நிற்பது அவரின் ரசிகர்களை வருத்தம் அடைய வைத்திருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.