தனுஷின் புதிய படத்தில் விஜய் பட நடிகை!.. ஐயோ இவர் திட்டி பேட்டி கொடுப்பாரே..
Dhanush: கோலிவுட்டில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்தவர் தனுஷ். துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் இப்போது வரை நிற்காமல் ஓடி வருகிறார். சமீபகலமாகவே நிறைய படங்களை இயக்கத் துவங்கி விட்டார் தனுஷ். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராயன் படத்தை இயக்கி நடித்தார். இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது.
அதன்பின் தன் சகோதரி மகனை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கிற படத்தை இயக்குனர். இந்த படம் ஓடவில்லை. இந்த படம் வெளியாவதற்கு முன்பே இட்லி கடை என்கிற படத்தையும் இயக்கி நடித்தார் தனுஷ். இந்த படத்தில் நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்தனர். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இப்படம் வெளிவருவதில் தாமதமாகி வருகிறது.
ஒருபக்கம் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் தனுஷ் தொடர்ந்து நடித்து வருகிறார். தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த குபேரா படமும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்போது போர்த்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு பின் அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் தனுசுக்கு ஜோடியாக கோட் படத்தில் நடித்த நடிகை மீனாட்சி சவுத்ரி நடிப்பார் என சொல்லப்படுகிறது.
கோட் படம் முடிந்த போது பேட்டி கொடுத்த மீனாட்சி சவுத்ரி ‘இந்த படத்தில் எனக்கு முக்கிய வேடம் என சொல்லி கூட்டி வந்து ஏமாற்றி விட்டனர். முக்கியத்துவம் இல்லாத இடத்தில் என்னை நடிக்க வைத்து வேஸ்ட் செய்து விட்டனர்’ என கூறினார். தனுஷ் படத்திலாவது இவருக்கு நல்ல வருடம் கிடைக்கும் என எதிர்பார்ப்போம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


