ஆறு மணி ஆயிட்டா ரஜினிக்கு ‘செத்தான்டா சேகர்’ நிலைமைதான்.. பிரபலம் பகீர்!…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி. 75 வயதிலும் ஸ்லோமோஷன் வாக்கிங்கில் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமா துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினி இன்னும் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு கடும் போட்டியாளராக விளங்குகிறார்.

எத்தனை புது முகங்கள் வந்தாலும் ரஜினி என்ற ஒரு முகத்தை யாராலும் மறக்கடிக்க முடியவில்லை. வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களும் ரஜினியின் தீவிர ரசிகனாகவும் அவரின் ஸ்டைல்களை பாலோ செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

என்பதுகளின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அடையாளத்தை உடைத்து. ரசிகர்களை கவர்ந்தார் ரஜினி. பார்ப்பதற்கு கருப்பு நிறம், நடுத்தர உயரம், வேகமான வசன உச்சரிப்பு இவை அனைத்தும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது. அதனுடன் ஸ்டைல் மன்னனாகவும் வலம் வந்தார். தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப படங்களில் நடித்து இன்றும் தமிழ் மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர்களின் சிறு வயது புகைப்படங்களை எடுப்பதில் திறமை வாய்ந்தவர் ஸ்டில்ஸ் ரவி. இவர் இதுவரை எடுத்த புகைப்படங்களை ஒட்டுமொத்தமாக எடுத்தால் தனி புகைப்பட கண்காட்சியை திறந்து வைக்கலாம். அவ்வளவு இருக்கும். பிரபல புகைப்பட கலைஞரான ஸ்டில் ரவி ரஜினிக்கும் தனக்கும் இருந்த மனக்கசப்பை பகிர்ந்துள்ளார். அதில், “ரஜினியின் முதல் படமான பைரவி படத்தில் இருந்து நான் அவருடன் வேலை செய்து வருகிறேன்”.

#image_title

”அப்போவே அவர் மிகவும் ஆர்வத்தோடு வேலை செய்வார். அன்பாக என்னிடம் பழகுவார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிவா என்ற படத்தில் அவருடன் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது அன்றுதான் முதல் நாள் ஷூட்டிங் அன்று எடுக்கப்படும் புகைப்படங்களை கொண்டு தான் படத்திற்கான பப்ளிசிட்டி வேலைகள் தொடங்கப்படும். அதற்காக அவரிடம் ஒரு போட்டோ எடுக்க அனுமதி கேட்டேன். அந்த காலகட்டத்தில் தற்போது இருக்கும் வசதி மாறி இருக்காது”.

”கேமராக்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். அப்படி நான் கேமராவை அதற்குரிய ஸ்டாண்டில் வைத்து ஸ்டெடியாக பிடித்துக் கொண்டு ஒரு போட்டோ கேட்டேன். இந்த சம்பவம் நடக்கும்போது மாலை 5:30 மணி இருக்கும்”.

‘உடனே அவர் கண்ணா பின்னா என்று என்னை திட்டி விட்டார். நீங்களும் போட்டோ எடுக்கணுமா? என்று கோபத்துடன் கேட்டார். நான் இத்துடன் முடிவு பண்ணிட்டேன் இனிமேல் இந்த படத்தில் ஒர்க் பண்ணக்கூடாது என்று கிளம்பி விட்டேன். அவருடைய அசிஸ்டன்ட் ஒருவர் நான் கீழே சென்றதும் என்னை கூப்பிட மேல் மாடியிலிருந்து ஓடி வந்தார். ரஜினி சார் உங்களை வர சொல்லுவதாகவும் சொன்னார்”.

”என்ன ரவி கோச்சிக்கிட்டீங்களா? என்று ரஜினி சார் கேட்டார். நான் அவரிடம் ரஜினி நீங்கள் ஏதோ வித்தியாசமாக செய்து தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள் நானும் வித்தியாசமாக செய்யணும் என்று நினைக்கிறேன் அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு தேவை. என்னை தனிப்பட்ட முறையில் ஏதாவது திட்டிருந்தால் நான் சென்றிருக்க மாட்டேன். நான் வேலை செய்யும் பொழுது திட்டினால் எனக்கு மனக்கசப்பு ஏற்பட்டு விட்டது என்று அவரிடம் கூறினேன்”.

”உடனே அங்கிருந்து வந்த இயக்குனர், சார் ஐந்தரை ஆறு மணி ஆகிவிட்டது என்றாலே அவர் ட்ரிங்க்ஸ் மூடுக்கு போய்விடுவார். அதனால அவர் டென்ஷன்ல இருப்பார். என்று சொன்னார் பின்னர் ரஜினி சாரும் சாரி சாரி என்று சொன்னார். ரஜினி இருந்த உயரத்திற்கு என்னை திரும்பக் கூப்பிட்டு சாரி கேட்க வேண்டிய அவசியமே இல்லை ஆனால் அவர் அப்படி இருப்பதினால் தான் இன்று இவ்வளவு உயரத்திற்கு சென்றிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.