இட்லி கடை படத்திலேயே களமிறங்கிய இன்ப நிதி!.. ரஜினி கமல் படம் என்னாச்சி?…

Idli Kadai: நடிகர் தனுஷ் தயாரித்து நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம்தான் இட்லி கடை. இந்த படத்தில் நித்யா மேனன், அருண் விஜய் ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் முக்கிய இடத்தில் நடித்திருக்கிறார்கள். ஷூட்டிங் முடிந்து விட்டாலும் மற்ற வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனமும், தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்று இதுவரை சொல்லாமலேயே இருந்தார்கள். அதற்கு காரணம் ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியதுதான்.

இந்நிலையில், இப்படத்தின் தமிழக வெளியிட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றிருப்பதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ஒரு போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் உதயநிதியின் பெயருக்கு பதில் அவரின் மகன் இன்பநிதி பெயர் இடம் பெற்றிருக்கிறது. இன்பன் உதயநிதி வழங்குவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரெட் ஜெயின்ட் நிறுவனத்தை கவனித்து வந்த உதயநிதி துணை முதல்வராகி அரசியலுக்கு சென்று விட அவரின் மகன் இன்பநிதி இப்போது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இன்ப நிதி சில மாதங்களுக்கு முன்பு கலைஞர் டிவியின் சினிமா பிரிவில் சிஇஓ-வாக பணியாற்றி வந்தார்.

#image_title

தற்போது அவரிடம் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை கொடுத்திருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, கமல் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் போது ரெட் ஜெயண்டில் இன்பநதி நியமிக்கப்பட்டது தொடர்பாக அறிவிப்பார்கள் என செய்திகள் வெளியான நிலையில் இட்லி கடை படத்திலேயே களமிறங்கி இருக்கிறார் இன்பநதி.

அதோடு இட்லி கடை படம் எப்போது வெளியாகும் என இதுவரை சொல்லப்படாத நிலையில் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி படம் ரிலீஸ் ஆன அந்த போஸ்டரிலேயே குறிப்பிட்டிருக்கிறார்கள். இது தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.