Kpy பாலாவுக்கு உதவி செய்ய இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?.. பயில்வான் சொன்ன ரகசியம்..

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சீசன் 6 டைட்டில் வின்னர் தான் பாலா. தனது அனல் பறக்கும் பேச்சால் கவுண்டர் அட்டாக் செய்து காமெடி பன்ச்சால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். இவருக்கு ’பன்ச் பாலா’ என்ற பெயரும் இருக்கிறது.

ஒரு காலகட்டத்தில் விஜய் டிவியின் எல்லா நிகழ்ச்சிகளிலும் பாலாவை பயன்படுத்த தொடங்கி விட்டனர். பாலா இல்லாத நிகழ்ச்சியே விஜய் டிவி கிடையாது என்ற நிலை இருந்தது. அந்த அளவிற்கு பாலா தனது தனித்திறமையினால் உயர்ந்திருந்தார். தொடர்ந்து தன்னுடைய பாணியில் கலக்கிக் கொண்டிருந்த பாலாவுக்கு அவர் எதிர்பார்த்தது போலவே வெள்ளித்திரியிலும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு காமெடியனாக தனது கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை பயன்படுத்தி படங்களின் தலை காட்ட ஆரம்பித்தார்.

#image_title

புயல், மழை என எதுவாக இருந்தாலும் மக்களுக்காக இறங்கி ஓடி சென்று தன்னுடைய அக்கவுண்டில் இருக்கும் முழு பணத்தையும் அவர்களுக்காக செலவழிக்கும் மாமனிதன் பாலா. இப்படி தனக்கு வரக்கூடிய பணத்தை தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் மக்களுக்காக செலவழித்து வரும் பாலாவை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ், தற்போது இருவரும் இணைந்து மக்களுக்கு தேவையான சிறு சிறு உதவிகளை செய்து கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாலா இவ்வளவு உதவிகளை செய்கிறாரே அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? யாரால் கொடுக்கப்பட்டது? என்ற கேள்வி மூத்த பத்திரிகையாரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதனிடம் கேட்கப்பட்டது அதற்கு,” இன்று தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நடிகர்கள் கூட இப்படி அடுத்தவர்களுக்காக செலவு செய்ய மாட்டார்கள். ஆனால் பாலா ஓடி ஓடி தேடி தேடி சென்று உதவி செய்கிறார். இதற்கெல்லாம் காரணம் அந்த உண்மையுள்ள வெண்மையான மனது தான்”.

#image_title

”ஒரு டிவி நடிகை சர்வ சாதாரணமாக ஆடி காரில் செல்கிறார். பாலாவுக்கு விஜய் டிவியில் ஒரு ஷோவிற்கு ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை கொடுக்கிறார்கள். விஜய் டிவியில் அவர் இல்லாத ரியாலிட்டி ஷோவே கிடையாது. அதில் வரும் பணத்தை எல்லாம் சேமித்து வைத்து இவ்வாறு உதவி செய்கிறார். சில சமயங்களில் சிலரிடம் கடன் வாங்கியும் உதவி செய்கிறார்”.

” அதேபோல் கடனையும் திருப்பி கொடுத்துவிடுகிறார். அதேபோல பாலாவிற்கு நிறைய ரசிகர்கள் இருப்பதால் அவருக்கான ஷோ அடுத்தடுத்து குவிகிறது. அதனால் பணம் நிறைய வந்து கொண்டிருக்கிறது. அதை யாரும் மறுக்க முடியாத உண்மை. இது யாருக்கும் தெரிவதில்லை”. என்று கூறியுள்ளார்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.