தரமான ட்ரீட்டுக்கு ரெடியா!.. செப்டம்பரில் இவ்வளவு படங்கள் ரிலீஸா?.. ஹைப் ஏத்தும் மதராஸி..

தமிழ் சினிமாவில் இந்த மாதம் கிட்டத்தட்ட 16 திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ”மதராஸி” திரைப்படம் இந்த மாதம் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் மிக முக்கியமானதாகும்.

அனுஷ்கா வெகு நாட்களுக்கு பிறகு விக்ரம் பிரபு உடன் இணைந்து நடித்திருக்கும் ”கட்டி” திரைப்படம் வெளியாகிறது.

வெற்றிமாறன் தயாரித்து அவருடைய அசிஸ்டன்ட் வர்ஷா பரத் இயக்கத்தில் ”பேட் கேர்ள்” திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மக்களின் நாயகன் கே பி ஒய் பாலா நடிப்பில் ”காந்தி கண்ணாடி” படம் வெளியாகிறது. பாலாவின் தீவிர ரசிகர்கள் இந்த திரைப்படத்தை மிஸ் பண்ணாமல் பார்த்து விடுங்கள்.

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ரொமான்டிக் திரில்லர் படமாக ’தி கேர்ள் பிரண்ட்’ வெளியாகிறது.

நியூ ஏஜ் ரொமான்டிக் திரில்லர் திரைப்படமாக ”அந்த ஏழு நாட்கள்” படம் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் புதிய ரொமாண்டிக், திரில்லர் அனுபவத்தைப் பெற இந்த திரைப்படத்தை கட்டாயம் தியேட்டரில் கண்டு ரசியுங்கள்.

அறிமுகம் இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ”தணல்’ திரைப்படம் இந்த மாதம் வெளியாகிறது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அதர்வா இந்த படத்தில் என்ன புதுமை செய்திருக்கிறார்கள் என்பதை தியேட்டரில் கண்டு ரசிக்கலாம்.

கருத்து வேறுபாடு கொண்ட இரு நண்பர்களின் கதையாக ”பாம்’ திரைப்படம் வெளியாகிறது. கிராம பின்னணியில் அர்ஜுன் தாஸ் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் இயக்கி, நடித்து, தயாரித்து வெளியாகும் திரைப்படம் சீதா பயணம். புதுவித காதல் அனுபவத்தை பெற இந்த திரைப்படத்தை தவறாமல் தியேட்டரில் கண்டு களிக்கலாம்.

முற்றிலும் புது முகங்கள் நடிக்கும் ”காயல்’ திரைப்படம் ரொமான்டிக் ஜானரில் வெளியாகிறது. இயக்குனர் தமயந்தி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஜிவி பிரகாஷ் நடித்து இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் ”பிளாக் மெயில்” திரைப்படம் வெளியாகிறது. சாம் சிஎஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். புதுவித ரொமான்டிக் திரில்லர் அனுபவத்தை பெற இந்த படத்தை தவிர விட்டுவிடாதீர்கள்.

தெலுங்கு திரைப்படமான ”மிராய்” இந்த மாதம் வெளியாக இருக்கும் பிரம்மாண்ட திரைப்படமாகும். அனுமன் படத்தின் ஹீரோ இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தை பெற இந்த படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்கள்.

இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் ”கிஸ்” திரைப்படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது. இரண்டு காதலர்களுக்கு இடையில் நடக்கும் சுவாரசிய சம்பவங்களை இந்த படத்தில் காட்டியுள்ளார் இயக்குனர் சதீஷ்.

கெத்து தினேஷ் மற்றும் கலையரசன் ஆகியோர் நடிப்பில் ”தண்டக்காரன்யம்” திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு நல்ல விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் ”சக்தி திருமகன்” இந்த மாதம் வெளியாக இருக்கிறது. புரட்சிப் படங்களான அருவி மற்றும் வாழ் இயக்கிய அருள் பிரபு இந்த படத்தில் என்ன புரட்சி பேசி இருக்கிறார் என்று ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த குமரன் தங்கபாண்டியன் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகும் திரைப்படம் குமார சம்பவம். திரைப்படம் எடுக்க செல்லும் ஒருவன் சந்திக்கும் பிரச்சினைகளை இந்த படம் காமெடி கலந்து எடுத்துரைக்கிறது. கண்டிப்பாக இது ஒரு ஃபீல் குட் படமாக இருக்கும் என்பதை ட்ரைலர் உணர்த்துகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.