ரெண்டு பார்ட்!.. ராஜமவுலி – மகேஷ் பாபு பட்ஜெட் மட்டும் இவ்வளவு கோடியா?.. கண்ண கட்டுதே!..

SSMB29: பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனராக மாறியவர் ராஜமௌலி. பாகுபலி படத்திற்கு முன் ஐ, மகதீரா போன்ற படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார். ஆனால் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களும் இவரை இந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலம் அடைய வைத்தது. அதற்கு காரணம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி ரசிகர்களும் ஏற்றுக் கொள்ளும்படியான கதை, திரைக்கதை அமைத்து பாகுபலியை மெகா ஹிட் ஆகிய பெருமை ராஜமௌலிக்கு உண்டு.

பிரபாஸ், சத்யராஜ், ராணா, நாசர், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பலரும் நடித்து உருவான பாகுபலி மற்றும் பாகுபலி 2 ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. அதிலும் பாகுபலி 2ம் பாகம் 1200 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்திய சினிமாவில் அனைத்து மொழிகளிலும் வெளியாகும் பேன் இந்தியா கான்செப்டை உருவாக்கி வைத்தது ராஜமவுலி தான். அதன்பின் புஷ்பா, புஷ்பா2, கேஜிஎப், கேஜிஎப் 2, காந்தாரா, ஆர்.ஆர்.ஆர் போன்ற பல திரைப்படங்கள் பேன் இந்தியா படமாக வெளியாகி வசூலை குவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் ராஜமௌலி தான்.

ssmb29
#image_title

தற்போது மகேஷ் பாபுவின் 29 வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த பல மாதங்களாகவே இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடந்து வருகிறது. இந்த படத்திற்காக பிரம்மாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 1200 கோடி எனவும் இரண்டு பாகங்களாக இப்படம் வெளியாகும் எனவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படம் 120 நாடுகளில் பல மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள் இந்த முறை ராஜாமவுலி படம் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளது என சொல்லி ஹைப் ஏற்றுகிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.