Suriya: கடைசில சூர்யாவின் நிலைமை இப்படி ஆகிப்போச்சே! புழுதிய கிளப்பிட்டே இருக்காங்களே

Suriya: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு இப்போது கட்டாயமாக ஒரு வெற்றி தேவைப்படுகிறது. சொல்லப்போனால் அவர் ஒரு மாஸ் வெற்றியை கொடுத்தது கடைசியாக சிங்கம் படத்தில் தான்.

அதன் பிறகு ரிலீஸான எந்த படங்களும் அந்த அளவுக்கு வெற்றியை பதிவு செய்யவில்லை. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து மீம்ஸ் மெட்டிரியலாகவும் பார்க்கப்பட்டு வருகிறார் சூர்யா. கங்குவா பட ரிலீஸ் சமயத்தில் அரசியல் ரீதியாகவே அந்தப் படத்தை ஓடவில்லை என்று பலரும் கூறினார்கள். ஆனால் அந்தப் படத்திற்கு கொடுத்த பில்டப்புக்கும் ரிலீஸான பிறகு அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் முற்றிலும் வித்தியாசமாகவே இருந்தது.

நிச்சயமாக 1000 கோடி பட்ஜெட்டை அந்தப் படம் கடக்கும் என கூறினார்கள். ஆனால் போட்ட முதலீட்டை கூட எடுக்க முடியாமல் திணறியது. இப்படி பல கடுமையான விமர்சனத்தி
ற்கு அந்தப் படம் ஆளானது. படம் ரிலீஸாகி கிட்டத்தட்ட ஒரு வருடத்தை நெருங்கும் நிலையிலும் இன்னும் அந்தப் படத்தின் விமர்சனத்தை போட்டு போட்டு சூர்யாவை வச்சு செய்து வருகின்றனர்.

சூர்யாவுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் பண்றாங்க என தெரியவில்லை. மீண்டும் கங்குவா பட ரிலீஸுக்கு முன் என்னெல்லாம் பில்டப் பண்ணாங்களோ அதை மறுபடியும் வீடியோ போட்டு கலாய்த்து வருகின்றனர். உங்க மன அழுத்தம் போகணுமா? இந்த வீடியோவை பாருங்க என கங்குவா படம் பற்றி வந்த பில்டப் வீடியோவை இணையத்தில் பகிர்ந்து கிண்டலடித்து வருகின்றனர்.

சூர்யா மட்டுமில்லாமல் அவருடைய படங்களும் இப்போது ட்ரோல் மெட்டிரியலாகவே மாறிவிட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக கண்டிப்பாக பெரிய வெற்றியை சூர்யா கொடுத்தே ஆக வேண்டும் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதை சூர்யா செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.