நல்ல மனுஷனா இருந்தா விஜய் அதை செஞ்சிருக்கணும்.. நாடகத்தை நிப்பாட்டுங்க..பொளந்த அம்பிகா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தன்னுடைய தனித் திறமையால் சினிமாவில் உச்சம் தொட்ட விஜய் தற்போது அரசியலிலும் குதித்துள்ளார். இதனால் ரசிகர்கள் இனிமேல் நம்ம தளபதி திரைப்படங்களில் நடிக்க மாட்டாரா? என்று ஏக்கத்தில் உள்ளனர்.
சினிமா பிரபலங்களும் விஜய் சினிமா விட்டு போவதை விரும்பவில்லை காரணம் இன்று தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் இவரால் பல நூறு கோடி பிசினஸ் இருக்கிறது. படம் நடிப்பதை நிறுத்திவிட்டால் அதற்கான வருவாய் கண்டிப்பாக அடிபடும். இதனால் விஜய் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின் தான் தெரிய வரும்.

விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. தனது அரசியல் வருகையை பகிரங்கமாக அறிவித்த விஜய் மற்ற கட்சிகளை பெரிதும் விமர்சிக்காமல் மாநாட்டில் பேசினார். இவரின் பேச்சு ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் அரசியல் விமர்சனங்களுக்கு என்ன இவ்வளவு பயத்தோடு விஜய் பேசுகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தது.
தமிழ்நாட்டில் அதன் பிறகு நடந்த எந்த பிரச்சனைக்கும் விஜய் பெரிதளவில் களத்தில் வந்து நிற்கவில்லை. அப்படியே வந்தாலும் நான்கு, ஐந்து நாட்கள் நாட்கள் கழித்து ஏதோ சம்பரதாயத்திற்கு வந்தது போல் நிற்பார். இந்நிலையில் தற்போது மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் பேச்சு இந்த முறை அனைவரையும் கலாய்த்து தள்ளிவிட்டார். இந்த பேச்சு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்பது போல வாய்க்கு வந்தபடி கத்தியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் நடந்த எந்த பிரச்சனை பற்றி பேசவில்லை என குற்றச்சாட்டும் அவர் மீது எழுந்தது. இந்நிலையில் விஜய் இந்த மாதிரி செய்யும் அரசியல் எந்த வேலைக்கு ஆகாது, உங்க நாடகங்களை நிப்பாட்டி விட்டு நீங்கள் மீண்டும் திரைத்துறைக்கு செல்லலாம் என்று நடிகை அம்பிகா சாடியுள்ளார்.
மேலும் பேசி அவர்,” விஜய் உண்மையாகவே நல்ல மனிதனாக இருந்தால் சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடந்தது. மக்களுக்காக உண்மையாக போராடக்கூடிய நபராக இருந்தால் விஜய் அந்த களத்தில் தூய்மை பணியாளர்களுடன் நின்று இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவரின் வீட்டில் தூய்மை பணியாளர்களை வரவழைத்து லைட் செட் பண்ணி அதற்கு ஏற்றார் போல் கேமரா ஆங்கிள் வைத்து சினிமா எடுப்பது போல் அவர்களை உக்கார வைத்து பேசியுள்ளார்”.
”அவர்கள் விஜய் சார் கூப்பிட்டு இருக்கிறார் என்று போயிருக்கலாம். ஆனால் அவங்க மனசுக்குள்ள நாங்க இருக்கிற இடத்துக்கு நீங்க வந்திருக்கக் கூடாதா? என்று மனதில் நினைத்திருப்பார்கள். நீங்க இருக்கிற இடத்துக்கு நாங்க வரணும் நாங்க இருக்கிற இடத்துக்கு நீங்க வர மாட்டீங்க ஏன்னா அது உங்களுக்கு அசிங்கம். ஆனால் உங்களுடைய அசிங்கம் எடுப்பதற்கு மட்டும் நாங்கள் தேவை”.
”அப்படின்னு நினைத்து பீல் பண்ணி இருப்பாங்க. அந்த சந்திப்புக்குப் பிறகு ஒரு வாரத்தில் மதுரையில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட அங்கு பேசவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது”.என்று விஜய் மீது உள்ள காட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை அம்பிகா.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


