கேப்டன் உங்க சொத்து இல்ல!.. அவர அசிங்கப்படுத்தாதீங்க.. பிரேமலதா வைச்ச செக்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். தனது கடின உழைப்பால் சினிமாவில் உச்சம் தொட்டார். கேப்டனின் குணமே தேடி சென்று மற்றவர்களுக்கு உதவுவார், உதவி என்று தன்னை தேடி வந்தவர்களுக்கும் உதவி செய்வார். அதிலும் சாப்பாடு கேப்டனை மாதிரி யாரும் போட முடியாது.

அவரது சூட்டிங்கில் வாழை இலை விரித்து கறி விருந்து நடக்கும். தன்னலம் கருதாது பிறர் நலம் கருதி வாழக்கூடிய மனிதர். அரசியலில் அடுத்த எம்ஜிஆர் போல வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தமிழக மக்களுக்கு கொடுத்து வைக்காமல் போனது. மக்களுக்காகவே வாழ்ந்து தனக்காகவும் தனது குடும்பத்திற்காகவும் பெரிதளவில் எதுவும் செய்யாமல் சென்றார்.

#image_title

கேப்டனை இகழ்ந்தவர்கள் எல்லாம் அவரது அவரது மனைவிக்கு பின்னர் புகழ்ந்து வருகின்றனர். அவர் இருக்கும்போது அவரை மதிக்காமல் அவர் சென்ற பின்பு தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி என்ன பிரயோஜனம்.‌ திரை துறையில் தற்போது வரும் படங்களில் அவருக்கான மரியாதை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில் கெத்து தினேஷ் விஜயகாந்தின் ரசிகராக நடித்திருப்பார்.

அவர் கிரிக்கெட் விளையாடும் போது ’நீ பொட்டு வச்ச தங்க குடம்’ பாட்டு போடப்படும் அது மட்டும் இல்லாமல் ஆங்காங்கே விஜயகாந்தின் படங்களை பயன்படுத்தி இருப்பார்கள். அடுத்ததாக விஜயின் கோட் படத்தில் ஏஐ மூலம் விஜயகாந்தை கொண்டு வந்திருப்பார்கள். சண்முக பாண்டி நடித்த படைத்தவன் படத்துலயும் விஜயகாந்த் பயன்படுத்தப்பட்டிருப்பார்.

இந்நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, விஜயகாந்த் படங்களை இனி தமிழ் சினிமாக்களில் அனுமதியின்றி பயன்படுத்த தடை விதித்துள்ளார். ஏனென்றால் பயப்படுத்துவதற்கு முன்பாக அனுமதி வாங்க வேண்டும் என்று தற்போது கூறி இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு கேப்டன் படங்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கேப்டன் மக்கள் சொத்து என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார்.

#image_title

ஆனால் தற்போது அதற்கு அப்படியே ஆப்போசிட்டாக பேசி பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளார். இதைப் பற்றி மூத்த பத்திரிகையாளர் சினிமா விமர்சகருமான வலைப்பேச்சு அந்தணன் கூறுகையில்,” பிரேமலதா விஜயகாந்த் சொல்வதில் எந்த தவறும் இல்லை. சிலர் இஷ்டத்துக்கு விஜயகாந்தை பயன்படுத்தினார்கள். அது அவரின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக அமைகிறது. அதனால் பிரேமலதா விஜயகாந்த் சொன்னது எந்த தவறும் இல்லை”.

”விஜயகாந்த் குறித்து முழு முடிவும் எடுக்க வேண்டியது அவர்கள்தான். விஜயகாந்தை ஏ ஐ முறையில் தயார் செய்யும் பொழுது சரியாக பயன்படுத்தினால்தான் அதற்கு அர்த்தம் இருக்கும். ஆனால் இங்கு சில பேர் பட்ஜெட் காரணம் காட்டி தரம் குறைவாக, சமீபத்தில் கூட ஒரு படம் வந்தது அது விஜயகாந்த் மாதிரியே இல்ல ஆனா விஜயகாந்த் என்று சொல்கிறார்கள்”.

”அப்படி ஒரு மனிதரை இழிவுபடுத்தக் கூடாது. திரையுலகத்தில் அசைக்க முடியாத ஜாம்பவானாக இருந்த ஒருத்தரை நீங்கள் ரீ-கிரியேட் செய்யும் பொழுது அவரை 100% முழுமையாக உருவாக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த முயற்சியை கைவிட வேண்டும். அதற்கு தான் பிரேமலதா இவ்வாறு கூறியுள்ளார்”. என்று வலைப்பேச்சு அந்தணன் விளக்கத்தை கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.