Suriya: பாட்டுக்கும் இவங்க பண்றதுக்கும் சம்பந்தமே இல்லையே? இதுக்கு சூர்யா என்னடா பண்ணாரு?

Suriya: சூர்யாவை பற்றி சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பல விமர்சனங்கள் கிளம்பி வருகின்றனர். அதுவும் அவருடைய மனைவியும் நடிகையுமான ஜோதிகா பாலிவுட்டில் எப்போது நடிக்க போனாரோ அதிலிருந்தே சூர்யாவை டார்கெட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். அதற்கேற்றவாறு கோலிவுட்டை பற்றி தொடர்ந்து ஜோதிகா பாலிவுட்டில் எதிர்மறையான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்.

சமீபத்தில் கூட ஒரு பட விழாவில் பேசும் போது பாலிவுட்டில் என்னுடைய புகைப்படத்தை ஹீரோவுக்கு இணையாக போஸ்டரில் போட்டிருக்கின்றனர். பாலிவுட் நடிகர்கள் ஈகோ எதுவும் பார்ப்பதில்லை. ஆனால் சவுத்தில் இப்படி நடக்காது என்று பேசியிருந்தார். இப்படி தொடர்ந்து கோலிவுட் சினிமா பற்றியும் இங்குள்ள நடிகர்கள் பற்றியும் தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்து வருகிறார் ஜோதிகா.

சொல்லப்போனால் தமிழில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்ததன் மூலம்தான் அவர் ஒரு முன்னிலை நடிகையாக மாறினார்.அதற்கு இங்குள்ள மக்கள் கொடுத்த ஆதரவும் நல்ல கதாபாத்திரங்களும்தான் காரணம். இப்படி தூக்கிவிட்ட சினிமாவையே காலில் போட்டு மிதிக்கிற மாதிரி அவருடைய பேச்சு இருந்து வருகிறது. இதனால் ஜோதிகாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சூர்யாவின் படங்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இப்போது கூட அவர் நடித்த வேல் படத்தை பற்றியும் கிண்டலடித்து வருகின்றனர். சக்கரபாண்டினு ஒரு கேரக்டர். சக்கரை ஆலைக்கு Bomb வைப்பாரு. அப்பத்தாக்கு சோத்துல வெஷம் வைப்பாங்க. காக்கா கக்கா போனதுக்கு டீ கடைய கொளுத்தி விட்ருவானுங்க. வேலுனு ஒரு கேரக்டர், லாட்ஜ் குள்ள வச்சி ரெண்டு பேரு கைய வெட்டுவாரு. சக்கரபாண்டி Rice mill ல கொளுத்திட்டு, காக்கா உக்காந்து Fire Accident னு காவல் நிலையத்தில் போய் Reel விடுவாரு.

vel

எல்லா அநியாயமும் அந்த ஊர்ல நடக்கும். Opening Song மட்டும் இந்த ஊரில் எப்பவும் கெட்டதே நடக்காதுடா என்று இருக்கும். இதென்னடா நியாயம் என சூர்யாவின் வேல் படத்தை கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.