நியூ ஏஜ் ரொமான்டிக் திரில்லர் ’அந்த 7 நாட்கள்’.. ட்ரெய்லர் விரைவில்

திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் 1981 ஆம் ஆண்டு தாலி சென்ட்டிமென்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ”அந்த ஏழு நாட்கள்”. கே.பாக்யராஜ் ஒரு மலையாளி கேரக்டரில் இந்த படத்தில் நடித்திருப்பார். அன்றைய காலகட்டத்தில் குடும்ப ரசிகர்களின் விருப்பத்தக்க படமாக இருந்தது.

காதல், குடும்ப செண்டிமெண்ட் அடிப்படையாக கொண்டு வெளிவந்த திரைப்படம் பாக்யராஜுக்கு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதேபோல 2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவை அடுத்த பரிணாமத்தில் காட்டுவதற்காக புது முகங்கள் கொண்டு நியூ ஏஜ் ”அந்த ஏழு நாட்கள்” திரைப்படம் வெளியாக உள்ளது.

#image_title

முரளி கபீர் தாஸ் தயாரிப்பில் எம்.சுந்தர் கதை எழுதி இயக்கியிருக்கிறார். மேலும் இந்த படத்தில் அறிமுக நட்சத்திரங்களாக அஜிதேஜ், ஸ்ரீஸ்வேதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு சச்சின் சுந்தர் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் ஏற்கனவே வெளிவந்த பாடல்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் முத்தமிழன் டி.ராமு எடிட்டிங் மற்றும் பி எப் எக்ஸ் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

படத்தின் கதையைக் கேட்டவுடன் இதற்கு அந்த ஏழு நாட்கள் என்று டைட்டில் வைக்க தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். இதற்காக கே.பாக்யராஜிடம் அனுமதி வாங்கியது மட்டுமல்லாமல் அவரையும் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார். படத்தின் டைட்டிலை கேட்டவுடன் சிலர் இதை ரீமேக் என்று நினைத்துக் கொள்வார்கள்.

ஆனால் ரொமான்டிக் திரில்லராக இந்த படம் உருவாகி இருக்கிறது. இன்றைய தலைமுறை எதிர்பார்ப்பது போல் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் அதே போல சினிமாவில் ஒரு புது அனுபவத்தை பெற திரில்லர் காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளதாக பட குழு தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ் சினிமா கண்டிராத புதிய கதை அடுத்தடுத்த திருப்பங்கள் நிறைந்த திரில்லர் காட்சிகள் ‌ இனிமையான இசை திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என 2025 ஆம் ஆண்டில் தவிர்க்க முடியாத ரொமான்டிக் திரில்லர் படங்களில் இந்த படம் தனி இடம் பிடிக்கும்.

வருகிற செப்டம்பர் 12ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதற்கு முன் விரைவில் இந்த படத்திற்கான ட்ரெய்லர் வெளியாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் மறக்க முடியாத திரில்லர் அனுபவத்தை பெற இந்த படத்தை தியேட்டரில் கண்டு ரசிக்கலாம். நிச்சயம் தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு பேசப்படும் படமாக இந்த படம் இருக்கும் என்று பட குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.