எல்லாம் தன்ஷிகா வந்த நேரம்.. ஆளே மாறிய விஷால்.. இதெல்லாம் நம்பற மாதிரியாங்க இருக்கு..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். ஒரு மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட விஷால் சமீப காலமாக இவரின் படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது. எப்படியோ முட்டி மோதி ஒரு வழியாக மார்க் ஆண்டனி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி பெற்று கொடுத்தது.

அதன் பிறகு இவர் நடித்த படங்கள் எதுவும் விஷாலுக்கு கை கொடுக்கவில்லை. இந்த வருடம் பொங்கலுக்கு 12 வருடம் கிடப்பில் போடப்பட்ட ’மதகஜராஜா’ படம் வெளியாகி தூங்கி கிடந்த விஷால் மார்க்கெட்டை ஓரளவுக்கு தூசி தட்டி வைத்தது. ஒரு பக்கம் நடிகராக போராடி வந்தாலும் மறுபக்கம் நடிகர் சங்க பொதுச் செயலாளராக அரும்பாடு பட்டு வருகிறார்.

#image_title

இந்நிலையில் நடிகர் சங்கம் கட்டி முடித்த பிறகு தான் எனக்கு கல்யாணம் என்ற முடிவோடு இருந்தார். ஒரு வழியாக கட்டிடம் இறுதி கட்ட பணிகளில் இருக்கிறது. இதனால் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்து கொள்வதாக பொதுவெளியில் ஏற்கனவே அறிவித்தார் விஷால். சமீபத்தில் கூட இவர்கள் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் விஷாலின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியிருந்தது. ஆர் பி சவுத்ரி சூப்பர் குட் பீலிம்ஸ் தயாரிக்கும் ”மகுடம்” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தில் துஷாரா விஜயன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது.

#image_title

படத்தின் ஷூட்டிங்கில் விஷால் வேறு எந்த சூட்டிங்கிலும் இல்லாத சின்சியாரிட்டியை இதில் காட்டி வருகிறார், என்று மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார் மேலும் அவர் கூறியதாவது,” சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை விஷால் மிகவும் சீரியஸாக நடித்து வருகிறார்.

அதிலும் காலை 6:00 மணிக்கே மேக்கப் உடன் செட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நம்ம விஷாலா இப்படி சின்சியராக இருக்கிறார்? என்று பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். இது எல்லாம் தன்ஷிகா வந்த நேரம் தான். விஷால் இப்படி இருக்கிறார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க” என்று வலைப்பேச்சு நிகழ்வில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.