மதராஸி படத்துக்கு சிவகார்த்திகேயன் கேட்ட சம்பளம்!.. அட எஸ்.கே இவ்வளவு நல்லவரா!..

Madharaasi: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் மதராஸி. அமரன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் இது. தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என முக்கிய திரைப்படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதிரடி ஆக்சன் காட்சிகளோடு சமூக கருத்துக்களையும் தனது படத்தில் வைப்பவர் இவர்.

விஜயை வைத்து மூன்று திரைப்படங்களை இயக்கினார். இதில் துப்பாக்கி விஜயின் கெரியரில் முக்கிய படமாக அமைந்தது. கடைசியாக ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. எனவே கடந்த நான்கு வருடங்களாக இவரின் இயக்கத்தில் எந்த படமும் வெளியாகவில்லை. இந்நிலையில்தான் இப்போது சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இந்த படத்தில் ருக்மணி வசந்த் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் துப்பாக்கி படத்தில் வில்லனாக வந்த வித்யூத் மதராஸி படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார்.

madharasi
#image_title

காதல் கலந்த ஆக்சன் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. காதலிக்காக ஒருவன் எந்த எல்லைக்கும் போவான் என்பதை இப்படத்தில் காட்டி இருக்கிறார்கள். கஜினி படத்தின் இன்னொரு வெர்ஷனாகவே இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் டிரைலரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பள விவகாரம் வெளியே தெரிய வந்திருக்கிறது இந்த படத்தின் ஆடியோ லான்ச்சில் சிவகார்த்திகேனே இதுபற்றி பேசியிருக்கிறார்.

மாவீரன் படம் உருவாகும் போது இந்த படத்தை பற்றி பேசினோம். எனக்கு இருக்கும் மார்க்கெட்டுக்குள் முருகதாஸ் சாரையும் உள்ளே கொண்டு வந்து மற்ற எல்லா நடிகர்களுக்கும் சம்பளம் கொடுத்து. படத்தை எப்படி உருவாக்குவது என யோசித்தபோது எனக்கு அடிப்படை சம்பளம் மட்டும் கொடுங்கள் படம் வந்து வசூல் ஆன பின்பு நான் எனது பங்கை வாங்கிக் கொள்கிறேன். நீங்கள் படத்துக்கு செலவு செய்யுங்கள்’ என தயாரிப்பாளரிடம் சொன்னேன்.

அவர் மிகவும் சந்தோஷப்பட்டு சம்மதம் சொன்னார். அதேநேரம் படத்திற்கு அவர் எந்த குறையும் வைக்கவில்லை. அப்படி உருவானதுதான் மதராஸி என பேசியிருக்கிறார். ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மதராஸி திரைப்படம் வருகிற 5ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.