எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 4 திரைப்படங்கள்!.. ஹைப் ஏத்தும் மதராஸி, இட்லி கடை…

2025-ல் எட்டு மாதங்கள் கடந்து விட்டது. இதில் தனுஷுக்கு குபேரா, அஜித்துக்கு குட் பேட் அக்லி, சூர்யாவுக்கு ரெட்ரோ, கடைசியாக ரஜினிக்கு கூலி ஆகிய பெரிய படங்கள் வெளியானது. வழக்கம்போல் சின்ன நடிகர்கள் மற்றும் அறிமுக நடிகர்களின் பல படங்களும் கடந்த எட்டு மாதங்களில் வெளியானது.
சின்ன பட்ஜெட் படங்களில் டூரிஸ்ட், குடும்பஸ்தன் ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றது.

அதிக ரசிகர்களை வைத்திருக்கும் விஜயின் கோட் படம் கடந்த வருடம் செப்டம்பரில் வெளியானது. அவர் அடுத்து நடித்துள்ள ஜனநாயகன் படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு ஜனவரிக்கு வரவிருக்கிறது. எனவே இந்த வருடம் விஜயின் படம் எதுவுமில்லை. அதேநேரம் அடுத்த சில மாதங்களில் வெளியாகவுள்ள படங்களில் 4 படங்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுபற்றி பார்ப்போம்.

lik
#image_title

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் மதராஸி. கஜினி பட ஸ்டைலில் காதல் கலந்த ஆக்சன் படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே படக்குழு புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் நடிகர் தனுஷ் நடித்து இயக்கியுள்ள இட்லி கடை திரைப்படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கிறது. இந்த படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.

அடுத்து லவ் டுடே, டிராகன் ஆகிய ஹிட் படங்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள LIK படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 2050ல் நடக்கும் பேண்டஸி கலந்த காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. வருகிற தீபாவளிக்கு இப்படம் வெளியாவுள்ளது.

bison
#image_title

தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளை பேசும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ள பைசன் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இது ஒரு நிஜ கபடி வீரரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கொண்டு உருவாகியுள்ளது. இந்த படமும் தீபாவளிக்கு வழியாக உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.