கூலி டீமுடன் வைப் பண்ணும் ஸ்ருதிஹாசன்!… லோகேஷுடன் செம செல்பி…

Coolie Sruthi: கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். பாடகி, நடிகை, இசையமைப்பாளர் என பல முகங்களை கொண்டவர் இவர். தனுஷ், விஷால், சூர்யா என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்தார். தெலுங்கில் பாலகிருஷ்ணாவுக்கெல்லாம் ஜோடி போட்டு நடித்த பெருமை இவருக்கு உண்டு. கடந்த சில வருடங்களாகவே அவர் அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை.

#image_title

மும்பையிலே தங்கி இருப்பதால் சில ஹிந்தி வெப் சீரியஸ்களிலும் திரைப்படங்களிலும் நடித்தார். அதில் சில படங்களில் படுக்கையறை காட்சிகளிலும் துணிச்சலாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
பல வருடங்களுக்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி படத்தில் ஒரு முக்கிய இடத்தில் இவர் நடித்தார்.

#image_title

கூலி படத்திற்கு முன்பு லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக ஒரு ஆல்பம் வீடியோவிலும் நடித்திருந்தார். அதில் இருவருக்கும் இடையேயான நெருக்கமான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. கூலி படத்தில் சிறப்பாகவே நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன்.

#image_title

இந்நிலையில் கூலி பட டீமுடன் சமீபத்தில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டார் ஸ்ருதி. அதோடு அது தொடர்பான புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ப்ரீத்தி டைரிஸ் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

#image_title

மேலும், ‘கூலி படத்தில் நடித்தது ஒரு அழகான அனுபவம்.. இந்த படம் மூலம் எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். இனிமையான அனுபவங்களும் கிடைத்திருக்கிறது. என்னுடைய நடிப்புக்கு கிடைத்த பாராட்டுகளுக்கும் நன்றி’ என உருகியிருக்கிறார் ஸ்ருதி.

sruthi
#image_title

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.