Jailer 2: ‘ஜெயிலர் 2’ படம் குறித்து நெல்சன் கொடுத்த அப்டேட்.. சொல்றத பார்த்தா கேமியோ இருக்கு போலயே

Jailer 2: தற்போது ரஜினி ஜெயிலர் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்காக நியூ லுக்கில் இருக்கும் ரஜினியின் புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றது. கடந்த 2023 ஆம் ஆண்டு ரஜினி நெல்சன் கூட்டணியில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படமாக மாறியது ஜெயிலர். கலெக்‌ஷனிலும் படம் பட்டையை கிளப்பியது. படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்தார்கள்.

அதனை தொடர்ந்து மறுபடியும் அந்த வெற்றிக் கூட்டணி ஜெயிலர் 2 படம் மூலமாக இணைந்துள்ளார்கள். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளா சென்னை என மாறி மாறி படமாக்கி வருகிறார்கள். ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றி என்பதால் ஜெயிலர்2 படத்தின் மீதும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

ஜெயிலர் 2 படத்தின் புரோமோ வீடியோவும் வெளியாகி பெரிய ஹைப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் படம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்ற ஒரு கேள்வியை நெல்சனிடம் சமீபத்தில் நடந்த ஒரு விழா மேடையில் கேட்கப்பட்டது. அதற்கு நெல்சன் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆடியன்ஸுக்கு முதலில் பிடிக்க வேண்டும்.

அதனால் படம் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்கிறேன் என கூறினார். அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதியை வைத்து எப்படியாவது ஒரு படம் பண்ண வேண்டும். நான் எடுக்கும் ஒவ்வொரு படங்களிலும் விஜய் சேதுபதியை கொண்டு வர வேண்டும் என நினைப்பேன். ஆனால் அது நடக்காமலேயே போய்விட்டது. ஆனால் அவருடன் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும் என அதே மேடையில் நெல்சன் கூறினார்.

VJS

இவர் சொன்னதை கேட்டதும் ஒரு வேளை ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலுக்கு விஜய் சேதுபதியை கொண்டு வந்து விடுவாரோ என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். அதற்கேற்ப விஜய்சேதுபதியும் ஜெயிலர் படத்தை 7 முறை பார்த்துவிட்டாராம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.