Yogibabu:’நீங்க ரொம்ப நல்லவருதான்’ பாவனாவுக்கும் யோகிபாபுவுக்கும் அப்படி என்னதான் பிரச்சினை?

Yogibabu: சமீபத்தில் ரவிமோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து அதன் துவக்க விழாவை சென்னையில் நடத்தினார். இந்த விழாவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். டாப் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை பிரம்மாண்டப்படுத்தினர். இந்த விழாவை தொகுப்பாளினி பாவனாதான் தொகுத்து வழங்கினார். அந்த சமயத்தில் யோகிபாபுவை பாவனா கடுப்படைய செய்த சம்பவம் பெரும் புரளியை ஏற்படுத்தியிருக்கிறது.

எங்க இருந்தீங்க நீங்க? உங்கள நான் பார்க்கவே இல்லையே? முன்னாடி வாங்க..மைக்க புடிங்க.. கொஞ்சம் எழுந்திருங்க என யோகிபாபுவை பார்த்து சொன்னார் பாவனா. உடனே யோகிபாபுவும் மைக்கை வாங்கிக் கொண்டு எழுந்து நின்றார். அதன் பிறகு கொஞ்சம் மைண்ட் கேம் விளையாடலாமா? உங்க மைண்ட் வாய்ஸ் என்ன சொல்லுது என கேட்டார் பாவனா.

என்னை வச்சு ரவி சார் படம் பண்றாரு. அந்த படம் நல்லா வரணும். அவருடைய தயாரிப்பு நிறுவனமும் நல்லபடியா வளரணும் என யோகிபாபு கூறினார். உடனே பாவனா நல்லவரு மாதிரி பேசுறீங்க. அதை தாண்டி என்ன நினைக்கிறீங்க என கேட்டார். இதை கேட்டதும் யோகிபாபு கொஞ்சம் கடுப்படைய ‘பின்ன நான் பின்னாடி நிற்கும் போது அந்த மனுஷனுக்கு வழி விடாதீங்க. சேர் போடாதீங்கனு உன்னை மாதிரி நான் நினைக்கலயே’ என யோகிபாபு கூறினார்.

இது பாவனாவுக்கு கொஞ்சம் நெருடலை கொடுத்தாலும் அதை சமாளிப்பதற்கு ‘ஆமா ஆமா நீங்க நல்லவருதான்’ என சொல்ல அதற்கு யோகிபாபு ‘அத ஏன் கொஞ்சம் சிரிச்சுக்கிட்டு சொல்ல வேண்டியதுதானே? குழாயடி சண்டை போடுற மாதிரி பேசுற’ என கேட்டார். இந்த உரையாடல் இணையத்தில் வைரலாக பாவனாவுக்கு எதிராக நெட்டிசன்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

வொர்ஸ்ட் பிஹேவியர் பாவனா என டேக் செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் யோகிபாபு விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் ரைட்டராகவும் இருந்திருக்கிறார். உதவி இயக்குனராகவும் பணிபுரிந்திருக்கிறார். அந்த சமயத்தில் அதே தொலைக்காட்சியில்தான் பாவனாவும் பணிபுரிந்து வந்தார்.

ஒரு வேளை அந்த நேரத்தில் பாவனாவுக்கும் யோகிபாபுவுக்கும் இடையே ஏதாவது பிரச்சினை நடந்திருக்குமோ? ரவிமோகன் ஸ்டூடியோ துவக்க விழாவில் இவர்கள் பேசிக் கொண்டதை பார்க்கும் போது முன்னாடி ஏதாவது நடந்திருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.