புது படத்துக்காக கோடிகளை கொட்டும் லெஜண்ட் சரவணா!.. அண்ணாச்சி ஒரு முடிவுலதான் இருக்காரு!..
Legend Saravana: தமிழகமெங்கும் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் அதிபர் லெஜெண்ட் சரவணா. துவக்கத்தில் தனது துணிக்கடை விளம்பர படங்களில் மட்டும் நடித்து வந்தார். விளம்பரப் படத்திலேயே தமன்னா, ஹன்சிகா என ஜோடி போட்டு நடித்தார். எனவே விரைவில் அவர் சினிமாவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே லெஜண்ட் என்கிற படம் அறிவிக்கப்பட்டது. இவரின் விளம்பர படங்களை எடுக்கும் ஜோடி ஜெர்ரி இரட்டையர்கள் இப்படத்தை இயக்கினார்கள்.

சரவணா தொழிலதிபர் என்றாலும் சினிமா தயாரிப்பது அவருக்கு புதிது. எனவே பல கோடிகளை ஆட்டய போட்டு விட்டனர். தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் லெஜன்ட் சரவணா. முதல் படத்தில் நடந்த தவறு இந்த படத்தில் நடக்கக்கூடாது என எச்சரிக்கையாக இருந்த சரவணா படத்தின் பட்ஜெட் 12 கோடி என முடிவெடுத்து படப்பிடிப்பு துவங்க்ப்பட்டது.
ஆனால் இப்போது படத்தின் பட்ஜெட் 40 கோடியில் வந்து நிற்கிறதாம். இதற்கு முக்கிய காரணம் சரவணாதான் என்று சொல்லப்படுகிறது. எனவே தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் ‘நமக்கென்ன’ என்கிற மனநிலையில் வேலை செய்து வருகிறார்கள் என சொல்லப்படுகிறது.

திரையுலகில் அனுபவம் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் தலையிலேயே மிளகாய் அரைத்து விடுவார்கள். ஆனால் எவ்வளவு நஷ்டம் என்றாலும் தாங்கும் பண வலிமை அவரிடம் இருக்கிறது என்பது நிதர்சனம்.
ஒருபக்கம் இப்படத்தில் சரவணன் லுக்கே ஆச்சர்யப்படுத்தியது. அதோடு முதல் படத்தில் செய்த எல்லா தவறுகளையும் சரி செய்து இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறாராம் சரவணா. மேலும், தனுசை வைத்து கொடி, பட்டாஸ், சிவகார்த்திகேயனை வைத்து எதிர் நீச்சல், காக்கி சட்டை, சூரியை வைத்து கருடன் ஆகிய படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பும் இருக்கிறது
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

