Brocode Movie: ஜீரோ ப்ரோமோஷன்! ஆனா? ‘ப்ரோகோட்’ படம் பற்றி கெனிஷா பகிர்ந்த தகவல்

Brocode Movie:ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரவி மோகன். அதனைத் தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராக தன்னை இந்த சினிமாவில் நிலை நிறுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பேராண்மை, தனி ஒருவன் என அடுத்தடுத்து ஆக்சன் படங்களில் நடித்து ஒரு மாஸ் ஹீரோவாகவும் தன்னை நிரூபித்தார்.

தற்போது பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மெயின் வில்லனாக நடிப்பது ரவி மோகன் தான். அதனால் இந்த படத்தில் எப்படிப்பட்ட ஒரு வில்லத்தனத்தை காட்டி மிரட்டி இருக்கிறார் என அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் சமீபத்தில் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் ஒரு புதிய தயாரிப்பு கம்பெனியை தொடங்கி இருக்கிறார் ரவி மோகன்.

இந்த நிறுவனத்தின் தொடக்க விழாவிற்கு தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவருடைய திரை நண்பர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டு ரவி மோகனை வாழ்த்தினார்கள். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ப்ரோகோட் என்ற ஒரு திரைப்படத்தை தயாரித்து அதில் நடிக்கவும் செய்கிறார் ரவி மோகன். இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்கி வருகிறார்.

இவர் ஏற்கனவே டிக்கிலோனா திரைப்படத்தின் இயக்குனர். ப்ரோக்கோட் திரைப்படத்தில் ரவி மோகனுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, ஷரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ் ,ஸ்ரீ கௌரி பிரியா என முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டு ஒரு ஹைப் ஏத்தி இருக்கிறார் ரவி மோகன். அந்த படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானதிலிருந்து அனைவரும் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

kenisha

இந்த நிலையில் ரவி மோகனின் தோழியான ஜெனிஷா ப்ரோகோட் திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோவுக்கு கிடைத்த வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ஜீரோ ப்ரோமோஷன். ஆனால் கிடைத்த வரவேற்பு எப்படி இருக்கிறது என்று பாருங்கள் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதுதான் இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.