எச்சி இலையில் சாப்பிட்டு மாட்டிக்கினாரு மாதம் பட்டி.. அந்தரங்க லீலைகளை அவுத்து விட்ட பிரபலம்

குக் வித் கோமாளி புகழ் மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி இருக்கும் போதே விவாகரத்து கூட வாங்காமல் இன்னொரு திருமணம் செய்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. நடிகராக மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம் மூலம் மக்களால் அறியப்பட்டாலும் தனது சமையல்கலை மூலம் குக் வித் கோமாளி நடுவராக செயல்பட்டு வெகுஜன மக்களை சென்றடைந்தார் மாதம்பட்டி ரங்கராஜ். இந்த நிலையில் அன்மையில் இவர் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் என்பவரை திருமணம் செய்தார்.

இவர்கள் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் இணையதளத்தில் வைராகி வருந்தது. பிரதமர் மோடி தொடங்கி நாட்டின் பல முக்கிய நட்சத்திரங்களுக்கு விருப்பமான உணவுகளை சமைத்துக் கொடுத்த ரங்கராஜரின் புதிய வாழ்க்கை பயணத்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

முதல் மனைவி ஸ்ருதியை திருமணம் செய்த ரங்கராஜிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் ரங்கராஜுக்கு ஜாய்யுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் எளிய முறையில் நெருங்கிய உறவினர்களை மட்டும் கொண்டு கோயிலில் ஜாய் மற்றும் ரங்கராஜின் திருமணம் நடந்துள்ளது.

#image_title

மேலும் ஜாய் தனது ட்விட்டர் பக்கத்தில், ”தற்போது தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும்” பதிவிட்டிருந்தார். மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி இருக்கும் போதே இன்னொரு திருமணம் செய்திருந்தது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தற்போது இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் மீது தன்னை ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ”சென்னையில் உள்ள கோவிலில் வைத்து என்னை திருமணம் செய்து கொண்ட ரங்கராஜ் 7 மாத கர்ப்பமாக இருக்கும் என்னை ஏமாற்றி விட்டதாக நடிகரும் சமையல் கலைஞருமான ரங்கராஜன் மீது காவல் ஆணையத்தில் புகார் தெரிவித்திருந்தார்”.

#image_title

இந்த செய்தி மீண்டும் ரசிகர்களிடம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பணம் பேர் வசதி வாய்ப்பு இருந்தால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா என்று மக்களின் விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தார் மாதம்பட்டி ரங்கராஜ்
இந்நிலையில் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் மாதம்பட்டி ரங்கராஜன் அந்தரங்க லீலைகளை தோலுரித்து கூறியுள்ளார். அதில் ”மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரின் ரொமான்ஸை படத்தில் மட்டும் வைத்துக்


”கொள்ளாமல் நிஜ வாழ்க்கையிலும் அதனுடன் பயணிக்க ஆரம்பித்துவிட்டார். ஏற்கனவே விவாகரத்து ஆன சில நடிகைகளுடன் யாருக்கும் தெரியாமல் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் சைலன்டாக இருந்தார். பாடி டிமாண்டை தன்னுடைய கண்ட்ரோலில் வைத்திருக்க வேண்டும். அது தன்னை மீறி போச்சு என்றால் அதோடு சினிமாக்காரன்‌ கதை முடிந்தது.

”நம்ம மாதம் பட்டி டைவர்ஸ் மற்றும் விதவைகளாக இருக்கும் நடிகைகளை மட்டும் குறி வைத்து வலை வீசுவார். அதில் நிறைய தொடர்பும் வைத்திருக்கிறார். ஜாய்க்கு முன்னாடியே மூன்று நடிகைகளுடன் லிவ்விங் டுகெதர் வாழ்க்கையில் இருந்தார். பணம் பலத்தை சாப்பிட்டுவிட்டு கொட்டையை தூக்கி எறிந்து விடுவார். இதுதான் இவருடைய வழக்கம்”.

”சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவரும் விவாகரத்து பெற்றவர் தான். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசனை அதில் மாதம் பட்டிக்கு தனி ரசனை. பசியில் உள்ள ஒருவன் எச்சிலையில் உள்ள சாப்பாட்டை எடுத்து சாப்பிடுவது போல் ரங்கராஜ் ஜாய் கிரிசில்டா வை வேட்டையாடிவிட்டார்”.

”அதனால் அவர் ஆறு மாதம் கர்ப்பம் ஆகிவிட்டார். அதன் பிறகு இருவரும் கோவிலில் திருமணம் செய்து உள்ளார்கள். சட்டப்படி அந்த திருமணம் செல்லாது. மொத்தத்தில் மாதம்பட்டி தப்பு என்று தெரிந்தும் அதை கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் செய்திருக்கிறார். இப்படி வேலியில் போன ஓணானை வேட்டியில் விட்ட கதையாகி விட்டது மாதம்பட்டி ரங்கராஜின் நிலைமை”. என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.