அஜித் – ஆதித் ரவிச்சந்திரன் படம் டிராப்பா?.. ஐயோ பாவம் ஃபேன்ஸ்!..
AK64: நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருந்தும் அவர் நடிக்கும் படங்கள் சில பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அவரின் விடாமுயற்சி படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்காத நிலையில் குட் பேட் அக்லி படம் அவருக்கு கை கொடுத்தது. இப்படத்தை பக்கா கேங்ஸ்டர் ஆக்சன் படமாக எடுத்திருந்தார் அப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இதனால் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்து இருக்கிறார் அஜித்.
ஆனால் இப்படத்திற்கு அஜித் 180 கோடி சம்பளம் கேட்டார். ஆதிக் சம்பளம் மற்றும் படத்தின் மொத்த செலவு கணக்குபோட்டால் இப்படத்தின் பட்ஜெட் 300 கோடியை தொடுகிறது. எனவே இப்படத்தை தயாரிக்க எந்த பெரிய நிறுவனங்களும் முன்வரவில்லை. அதன் பின்னர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை தயாரிக்கப் போவதாக செய்திகள் வெளியானது. ராகுல் அடிப்படையில் ஒரு சின்ன விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர். அவர் எப்படி 300 கோடி படத்தை தயாரிப்பார் என்கிற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்தது.

அவர்கள் நினைத்தது போலவே தற்போது இந்த படத்திற்கு சிக்கல் வந்திருக்கிறது. பொதுவாகவே ஒரு பெரிய நடிகரின் படத்தை துவங்கும் போது அப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை கடனாக வைத்து அப்படத்தின் தயாரிப்பாளர் அந்த பணத்தில் படத்தை எடுப்பார். ஆனால் இந்த படத்தை பொறுத்தவரை டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகளை எனக்கு கொடுத்து விடுங்கள் என அஜித் சொல்லிவிட்டார்.
எனவே படத்தை துவங்குவதற்கு பணம் இல்லாமல் ராகுல் தவித்து வருகிறாராம். கிட்டத்தட்ட இந்த படம் டிராப் ஆகிவிடும் என்றும் பேச துவங்கிவிட்டனர். விஜையை வைத்து 400 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க வரும் தயாரிப்பாளர்கள் அஜித்தை வைத்து 300 கோடியில் படம் எடுக்க தயாராக இல்லை என்பதுதான் நிதர்சனம். அஜித் – ஆதிக் படம் டேக் ஆப் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

