முதல் படமே இவ்வளவு கோடியா?… கவுத்துவிட்டா ரவி மோகன் கெரியரே காலி!..

Ravi Mohan Bro Code: இதுவரை நடிகராக இருந்த ஜெயம் ரவி இப்போது தயாரிப்பாளர் ரவி மோகனாக மாறிவிட்டார். சமீபத்தில் அவரின் ரவி மோகன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி அந்த விழாவிற்கு சிவ்ராஜ் குமார், சிவகார்த்திகேயன், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்களையும் அழைத்து வந்திருந்தார்
. கோலிவுட்டில் ஒரு தயாரிப்பு நிறுவனம் துவங்குவதையே ஒரு விழாவாக நடத்தியது ரவி மோகன்தான் என பேசுகிறார்கள்.

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய அன்றே இந்த நிறுவனம் இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதில் ஒன்று புரோ கோட். இந்த படத்தில் ரவி, எஸ்.ஜே சூர்யா, அர்ஜூன் அசோகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மனைவியிடம் அவர்களுக்கு பிடித்தது போல் நடிக்கும் கணவர்கள் வாய்ப்பு கிடைக்கும்போது எப்படி அவர்களிடம் இருந்து வெளியேறுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. ஐந்து நிமிடம் ஓடும் ஒரு வீடியோவையும் வெளியிட்டார்கள். அதுவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

ravi
#image_title

அந்த வீடியோவை பார்த்த பலரும் ரவி மோகனின் சொந்த வாழ்க்கையை அதோடு ஒப்பிட்டு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஒருபக்கம் எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பையும் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் 70 கோடி என சொல்லப்படுகிறது. இதில் ரவியின் சம்பளம் 25 கோடி மற்றும் எஸ்.ஜே சூர்யாவின் சம்பளம் 10 கோடி. இதுவே 35 கோடி போய்விட்டால் மீதி 35 கோடியில் படத்தை எடுப்பார்கள் என கருதப்படுகிறது.

ஆனால், ரவிக்கு அவ்வளவு வியாபாரமெல்லாம் இல்லை. அவரின் காதலுக்கு நேரமில்லை படம் தியேட்டரில் பிளாப் என்றாலும் ஓடிடி, சேட்டிலைட் ஆகியவற்றை சேர்த்து 25 கோடி வரை கொண்டு வந்தது ரெட் ஜெயின்ட் நிறுவனம். அப்படி இருக்கும்போது 70 கோடி பணத்தை போட்டால் அது ரவி மோகன் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபகரமாக அமையுமா என்கிற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது.

bro code
#image_title

இந்த படத்தை தயாரிப்பதற்காக கந்துவட்டி போல பணம் கொடுக்கும் பல பைனான்ஸியர்களிடம் ரவி மோகன் தரப்பு பணம் கேட்டிருப்பதாக சொல்லப்பட்டது. இப்படி அகல கால் வைக்கிறானே என்கிற கோபத்தில்தான் ரவி மோகனின் அப்பா மோகன் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என சொல்லப்பட்டது.

பேட்ட விழாவில் பேசிய ரஜினி கூட அப்படத்தில் எடுத்த சசிகுமாரை பார்த்து ‘பட தயாரிப்பில் ஈடுபடாமல் நிம்மதியாக நடிக்க மட்டும் செய்யுங்கள்’ என அறிவுரை சொன்னார். நடிகர் சிவகார்த்திகேயன் கூட படம் தயாரித்து 100 கோடி வரை கடனாளியானார். எனவே பெரிய நடிகர்களே படத்தை தயாரிக்க பயப்படும் நிலையில் ரவி மோகன் முதல் படத்தையே இவ்வளவு கோடி பட்ஜெட்டில் எடுக்க நினைத்திருப்பது கோலிவுட்டையை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.