திருப்பங்கள் நிறைந்த ரொமான்டிக் திரில்லர்!.. ஹைப் ஏத்தும் ‘அந்த ஏழு நாட்கள்’…
பெஸ்ட் காஸ்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் புது முகங்களான அஜித்தேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ”அந்த ஏழு நாட்கள்”. மேலும் இவர்களுடன் நமோ நாராயணன், சுபாஷினி, கண்ணன், தலைவாசல் விஜய், ஏ பி ஜனகன், வாசு ஸ்ரீனிவாசன், செம்புலி, ஜெகன் என பல நட்சத்திர பட்டாளங்கள் இதில் நடித்துள்ளனர். இந்த படத்தை எம்.சுந்தர் இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்கு இசை சச்சின் சுந்தர் அமைத்துள்ளார். ஏற்கனவே இவரின் இசையில் வெளியான பாடல்கள் மக்களிடம் வரவேற்பு பெற்று படத்திற்கு கூடுதல் கவனத்தை பெற்றுக் கொடுத்தது. தமிழ் சினிமாவில் வாரம் வாரம் புது புது கதை அம்சங்கள் கொண்டு வந்து ரசிகர்களை என்டர்டைன் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் ரொமான்டிக் மற்றும் கிரைம் திரில்லர் ஜானரில் நியூ ஏஜ் படமாக அந்த ஏழு நாட்கள் படம் உருவாகி இருக்கிறது. முன்னதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் கூறுகையில், ”நல்ல கதைகள் சிறந்த சினிமா அனுபவத்தை கொடுக்கும். அந்த வகையில் இதுவரை சொல்லப்படாத புதிய ஜானரில் இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதேபோல ஒரு படத்தை எடுத்து உள்ளேன்”.
”தனித்துவமான ஒரு கதையை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த போது இயக்குனர் எம்.சுந்தர் திருப்பங்கள் நிறைந்த சுவாரசியமிக்க இந்த ரொமான்டிக் திரில்லர் கதையை என்னிடம் கொண்டு வந்தார். அடுத்ததாக படத்தின் கதையை முழுவதுமாக கேட்ட உடனே முடிவு பண்ணிட்டேன் அந்த ஏழு நாட்கள் என்று தான் படத்தின் டைட்டில் வைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்”.
” இதற்காக கே.பாக்யராஜ் சாரிடம் கேட்டபோது அவரும் மறுப்பு தெரிவிக்காமல் உடனே ஒப்புக்கொண்டார். அது மட்டும் இல்லாமல் அவரையும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளோம்”. என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

