ஜெயிலர் 2 படத்தில் அஜித் பட நடிகை!.. இன்னும் எத்தனை பேர் இருக்காங்க?…
Jailer2: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து ஹிட் அடித்த திரைப்படம்தான் ஜெயிலர். இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரை கேமியோ வேடத்தில் நடிக்க வைத்திருந்தனர். மலையாள நடிகர் வினாயக் வில்லனாக நடித்திருந்தார். எனவே இப்படம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் நல்ல வசூலை பெற்றது. ரஜினி படங்களிலேயே 600 கோடியை வசூல் செய்த படமாக ஜெயிலர் இருக்கிறது.
இந்த பட விழாவில் ரஜினி சொன்ன காக்கா கழுகு கதை விஜய் ரசிகர்களை கோபப்படுத்த இப்போது வரை அவர்கள் ரஜினிக்கு எதிராகவும் ரஜினி படங்களுக்கு எதிராகவும் வன்மத்தை கொட்டி வருகிறார்கள். அந்தப் படத்திற்கு பின் ரஜினி வேட்டையன் படத்தில் நடித்தார்.
ஆனால் அந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கிற படத்தில் நடித்தார். ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த இந்த படம் இதுவரை 550 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
கூலி படத்தை முடித்த கையோடு நெல்சன் இயக்கும்ம் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கப் போனார் ரஜினி. இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார்
. இந்நிலையில் இந்த படத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறாராம். இவர் ஏற்கனவே ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்திருந்தார்.

ஜெயிலர் முதல் பாகத்தில் ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். ஆனால் அவருக்கு பெரிய வாய்ப்பு இந்த படத்தில் கொடுக்கப்படவில்லை. ரஜினி அடுத்த நடித்த வேட்டையன் படத்தில் அவரின் மனைவியாக கேரள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார். தற்போது ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன் பெயர் அடிபடுகிறது. இவர் இந்த படத்தில் ரஜினியின் மனைவியாக நடிக்கிறாரா அல்லது வேறு ஏதேனும் முக்கிய இடத்தில் நடிக்கிறாரா என்பது படம் வந்த பின்னரே தெரியவரும்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

