Vishal Sai Dhanshika: விஷால் கல்யாணம் குறித்த முக்கிய சம்பவம்… பிறந்தநாளில் வெளியான பரபர அப்டேட்!
Vishal Sai Dhanshika: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் விஷாலின் பிறந்தநாளான இன்று அவருடைய கல்யாணம் குறித்த அடுத்தக்கட்ட அப்டேட் வெளியாகி இருக்கிறது.
செல்லமே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஷால். அவர் குடும்பத்தில் ஏற்கனவே அவர் அண்ணன் அஜய் சினிமாவில் நடித்திருந்தாலும் மூன்று படங்களுக்கு மேல் அவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. அதை தொடர்ந்து விஷால் நடிப்பில் தெளிவாக இருந்தார்.
முதலில் ஆக்ஷன் படங்களை தனக்கான ஜானராக தேர்வு செய்துக்கொண்டார். அவர் நடிப்பில் முதல் 5க்கும் அதிகமான படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்தும் அவர் தேர்வு செய்யும் கதையில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆர்வம் இருந்தது.

இப்படி சினிமாவில் வளர்ந்துக்கொண்டு இருக்கும் போதே நடிகர் சங்க தேர்தலில் தனக்காக ஒரு டீம் உருவாக்கி நாசரை தலைவராக்கி கொண்டு பொருளாளராக சரத்குமார் மற்றும் ராதா ரவி டீமுக்கு எதிராக போட்டி போட்டு வெற்றியும் கண்டார்.
இதை தொடர்ந்து நடிகர் சங்கத்தின் கட்டடத்தை கட்டிய பின்னரே நான் திருமணம் செய்துக்கொள்வேன் எனவும் சபதம் போட்டார். அதனை தொடர்ந்து 10 வருடங்கள் கடந்தும் இன்னும் அந்த கட்டிட வேலை முடிந்தப்பாடு இல்லை. விரைவில் அதன் திறப்பு விழா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை சாய் தன்ஷிகாவும், தானும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் முறையாக பத்திரிக்கையாளர் முன்னர் அறிவித்து இருந்தார். இவர்கள் திருமணம் விஷால் பிறந்தநாளான இன்று நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்னும் நடிகர் சங்க கட்டிட வேலை முடியாமல் இருப்பதால் மீண்டும் விஷாலின் திருமணம் தள்ளி போய் இருக்கிறது. இந்நிலையில் இன்று அவரின் இல்லத்தில் சாய் தன்ஷிகாவுடன் நிச்சயத்தார்த்த விழா நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே அனுஷா ரெட்டி என்பவருடன் விஷாலுக்கு நிச்சயத்தார்த்தம் நடந்தது. பிரம்மாண்டமாக நடந்த விழாவில் பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டனர். ஆனால் அந்த ஆண்டே இருவரும் பிரிந்த நிலையில் தங்கள் சமூக கணக்கில் இருந்து படங்களையும் நீக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


