முதல் பாட்டே இப்படியா?.. சாய் அபயங்கர் கவுத்துப்புட்டாரே!.. Dude ஃபர்ஸ்ட் சிங்கிள் கேட்டீங்களா?…

கட்சி சேர, ஆசை கூட என இரண்டு துள்ளலான பாடல்கள் தந்து தமிழ் இளைஞர்களை தன்வசம் இழுத்திருக்கிறார் சாய் அபயங்கர். spotify, youtube என எல்லா தளங்களிலும் தம்பிதான் இப்போது ஹாட்ஸ்டார். தனி இசை பாடல்கள் ட்ரண்ட் அறிந்த இசைக்கலைஞன். இன்றைய இசையுகத்தின் இந்த தலைமுறைக்கு தேவைப்படும் சூட்சுமத்தை இளம் பருவத்திலேயே கண்டுபிடித்து அசத்துகிறார் இந்த ஜென்சி கிட் சாய் அபயங்கர்.

தமிழகத்தின் இளைஞர்களை தன் வசப்படுத்தி மயக்கியது மட்டுமில்லாமல் தற்போது நடிகர்கள் சூர்யா, லாரன்ஸ், எஸ்.டி.ஆர் போன்ற நடிகர்களின் அடுத்தடுத்த படங்களுக்கு மியூசிக் டைரக்டராக கலக்குகிறார். அதற்குள் அடுத்த பாடல் ஒன்று தாங்களே என ரசிகர்கள் ஆளாய் பறந்து கொண்டிருக்கிறார்கள். பாடகர்கள் திப்பு, ஹரிணியின் செல்வ மகனான இந்த எதிர்காலத்தின் இசை முகத்துக்கு விகடனின் நம்பிக்கை விருதும் கிடைத்துள்ளது .

ஒரு இண்டிபெண்டன்ட் ஆர்டிஸ்ட் ஆக வெறும் மூன்று பாடல்களை மட்டும் ரிலீஸ் செய்து அதனால் சுமார் 8 படங்கள் வரை கைவசம் வைத்துள்ளார் சாய் அபயங்கர். பாடல்கள் எளிதாக செய்துவிட்டார். ஒரு முழு படத்திற்கு இவர் எப்படி பின்னணி இசை அமைப்பார்? என்று பலரும் கேள்வி எழுப்பு வருகின்றனர்.

பாடல்கள் செய்வது எளிது, படத்திற்கு பின்னணி இசை செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இருப்பினும் அவரைத் தேடி எட்டு படங்கள் தேடி சென்று இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இசை அமைத்து ஒரு படம் கூட வெளியாகவில்லை, இருப்பினும் இவர் மீது நம்பிக்கை வைத்து கோலிவுட் இயக்குனர்கள் படையெடுத்து செல்வது ஏன்..? பல கேள்விகள் இவர் மீது எழுவதுண்டு.

#image_title

இந்நிலையில் சாய் அபயங்கர் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தன்னுடைய முதல் திரைப்படத்திற்காக கம்போஸ் செய்த முதல் பாடலை வெளியீட்டு உள்ளார். அந்த வகையில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டியூட் படத்தின் முதல் சிங்கிள் ”ஊரும் ப்ளட் ”என்ற பாடலை வெளியாகியிருக்கிறது.

ஏற்கனவே இவர் சூர்யாவின் கருப்பு படத்திற்கான டீசரில் இவரின் பின்னணி இசை கலவையான விமர்சனங்களை பெற்றது. திரைப்படத்திற்காக அவரது முதல் பாடல் முந்தைய பாடல்களைப் போல இனிமையாகவும் வைப் செய்யும் அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாட்டு எங்கு தொடங்கியது எங்கு முடிந்தது என்று ஒன்றுமே புரியாது போல் இருந்தது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாயின் முதல் பாடல் இரைச்சலாகவும் கத்திக்கொண்டே இருக்கிறார் சாய். அதுமட்டுமில்லாமல் எவனுக்கு இந்தப் பாட்டு பிடித்ததோ அவன் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாயின் முதல் பாடல் இப்படி சப்புனு இருந்தது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது. அடுத்தடுத்த பாடல்களில் சாய் தனது காம்பேக்கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வருகிற தீபாவளி அன்று ரிலீசுக்கு வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.