ரவி மோகனை விட தனுஷ் நல்ல அப்பா!.. படம் போட்டு திட்டும் ஃபேன்ஸ்!..
Ravi Mohan: கோலிவுட்டில் இருக்கும் முக்கிய நடிகர்களில் ஜெயம் ரவியும் ஒருவர். சில மாதங்களுக்கு முன் தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். ரவியின் படங்கள் மெகா ஹிட் படங்களாக அமைவதில்லை என்றாலும் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்கும் படங்களாக இருப்பதால் கோலிவுட்டில் தொடர்ந்து தாக்குப் பிடித்து வருகிறார்.
கடந்த பல வருடங்களாகவே இவருக்கு சூப்பர் ஹிட் படங்கள் அமையவில்லை. ஒருபக்கம் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து பரபரப்பை உண்டாக்கினார். விவாகரத்து வழக்கு இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. ஒருபக்கம் பாடகி கெனிஷா என்பவரோடு நெருக்கமாக இருக்கிறார். ‘மன உளைச்சலில் நான் இருந்த போது என்னை மீட்டெடுத்தவர் கெனிஷா. எனக்கு கடவுள் கொடுத்த பரிசு’ என்றெல்லாம் பேசினார்.

இதுவரை நடிகராக இருந்த ரவி மோகன் இப்போது தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறார். அவரின் தயாரிப்பில் இரண்டு படங்கள் உருவாகவுள்ளது. முதல் படத்தை கார்த்திக் யோகி இயக்க Bro Code என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நேற்று இப்படத்தின் புரோமோ வீடியோவும் வெளியானது. மற்றொரு படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்திற்கு An Ordinary Man என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில்தான் ரசிகர்கள் ரவி மோகனை தனுஷோடு ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்தாலும் தனது படம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு தனது இரு மகன்களையும் அழைத்து செல்கிறார். ஆனால் ரவி மோகன் சமீபத்தில் அவரின் தயாரிப்பு நிறுவனம் துவங்கியதற்காக நடந்த விழாவில் கூட தனது மகன்களை கூட்டி வரவில்லை. இதை பார்க்கும் போது ரவிமோகனை விட தனுஷ் நல்ல அப்பா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு ரவி மோகனை பற்றி குறை சொன்ன ஆர்த்தி ‘எனது இரு மகன்களும் என்னிடம்தான் இருக்கிறார்கள். அவர்களிடமும் செல்போன் இருக்கிறது. ஆனால் எப்போது அப்பா பேசுவார் என காத்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால் அவரின் அப்பா அவர்களிடம் பேசுவதில் ஆர்வம் காட்டவில்லை’ என புகார் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


