சொட்ட தலையோட வந்தா டிக்கெட் ஃப்ரீ.. வழுக்கை தலை பிரச்சனைகளை சொல்லும் ’சொட்ட சொட்ட நனையுது’

ஒவ்வொரு வாரமும் வெளியாகும் தமிழ் சினிமாவில் ஏதாவது புதுமையான கதைகள் மக்களிடையே தனி ஈர்ப்பை பெறும். அந்த வகையில் நாளை வெளியாக இருக்கும் ”சொட்ட சொட்ட நனையுது” திரைப்படம் தற்போது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிக் பாஸ் புகழ் வர்ஷினி, நிஷாந்த், ஷாலினி, ரோபோ சங்கர், புகழ் மற்றும் கேபிஒய் வினோத் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் கதைப்படி வழுக்கைத் தலை உள்ளவர்கள் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பல பிரச்சனைகளை ஆராய்ந்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தின் டிரைலர் வெளியானபோது சிலர் ஹீரோ கெட்டப் போட்டுக் கொண்டு நடிக்கிறார். ஒருவேளை இது ரஜினி நடிப்பில் வெளியான இது ’தில்லு முல்லு’ படமாக கூட இருக்கலாம் என்று சில ரசிகர்களின் கருத்தாக இருந்தது.

#image_title

ஆனால் படம் வெளியாகும் போது தான் இதன் உண்மையான கதை என்பது மக்களுக்கு தெரியும். ஏனென்றால் படத்தில் கதாநாயகன் முடி இருந்தும் முடி இல்லாமல் நடித்திருப்பார். இந்த படத்தை பற்றி தேசிய துணை இயக்குனர்,” படம் சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தை பார்த்து விட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னை கிண்டல் செய்தீர்களா? என நிச்சயம் கேட்பார்”.

”அப்படி அவர் கிண்டலாக கேட்டாலும் நிச்சயமாக பாராட்டக்கூடிய வகையில் இந்த படம் இருக்கும்” என்று கூறியுள்ளார். இந்த படம் ஒரு வழுக்கைத் தலை மனிதனின் எதார்த்த வாழ்க்கையை காமெடி கடந்து உருவாகி இருக்கிறது. கலக்கப்போவது யாரு புகழ் ராஜா இப்படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ளார். இந்நிலையில் படம் நாளைக்கு ரிலீஸ் ஆக இருக்கும் வேலையில் படக்குழு ஆடியன்ஸ்க்கு ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 29ஆம் தேதி அதாவது நாளைக்கு சென்னையில் உள்ள ரோகினி சில்வர் ஸ்கிரீன் திரையரங்கில் சொட்ட சொட்ட நனையுது திரைப்படத்தை அதே முடி பிரச்சனையோடு காண வரும் முதல் 100 ஆண்களுக்கு டிக்கெட் இலவசம். இது உங்களுக்கான திரைப்படம் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முடி பிரச்சனையை பேசும் முதல் திரைப்படமாக வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மக்கள் எவ்வளவு ஆதரவு கொடுக்கிறார்கள் என்பது வரும் வாரங்களில் தெரியவரும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.