அகண்டா 2 ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர்!.. இப்படி ஆகிப்போச்சே!…
Akhanda 2: தெலுங்கு சினிமா ரசிகர்களால் God of Mass என கொண்டாடப்படுபவர் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா. ரசிகர்கள் இவரை பாலையா என அழைக்கிறார்கள். ஆந்திராவில் இவருக்கென பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவரின் படங்கள் அசத்தலான வெற்றியும் பெறுகிறது. இவரின் நடிப்பில் வெளியாகி அசத்தலான வெற்றியை அடித்த திரைப்படம்தான் அகண்டா.
இப்பபடத்தை போயாப்பட்டி சீனு இயக்கியிருந்தார். 4 வருடங்கள் கழித்து இப்படத்தில் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்ததால் இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்தின் டைட்டில் டீசர் வீடியோ பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 10ஆம் தேதி வெளியானது.

இந்த டீசரில் இமயமலையில் எதிரிகள் சுற்றி நிற்க கழுத்தில் திரிசூலத்தை சுற்றியபடி அவர்களை கொன்று துவக்கும் காட்சிகள் எல்லாம் இடம் பெற்றிருந்தது. இதை பார்த்த போதே பாலையாவின் ரசிகர்கள் ஹைப் ஆகிவிட்டார்கள். தசரா பண்டிகை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 25ஆம் தேதி இப்படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். மூன்று வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் டப்பிங் பணியை பாலகிருஷ்ணா முடித்து விட்டார்.
இந்நிலையில்தான் இப்படத்தின் தயாரிப்பு தரப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டு பாலையாவின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அகாண்டா 2 படத்தை ரசிகர்களின் பார்வைக்கு கொடுப்பதற்காக படக்குழு இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறது. இப்படத்தின் பின்னணி இசை, VFX உள்ளிட்ட பணிகளை போன்றவை ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்க வேண்டும் என உழைத்து வருகிறோம்.

இதன் காரணமாக ஏற்கனவே அறிவித்த செப்டம்பர் 25ஆம் தேதி இப்படம் வெளியாகாது. படம் எப்போது வெளியாகிறது என்பதை விரைவில் தெரிவிப்போம். ரசிகர்களுக்கு அகண்டா 2 திரைப்படம் நல்லதொரு தியேட்டர் அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அகாண்டா 2 ஒரு படமாக மட்டுமே இல்லாமல் சினிமாவின் திருவிழாவாக இருக்கும்’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


