குடி‌ கும்மாளம்.. நடுரோட்டில் சண்டை போட்ட லட்சுமி மேனன் கூலிப்படையுடன் தொடர்பு.. எப்படி ?

தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் தமிழில் முதலில் அறிமுகமான ”கும்கி” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களின் கவனத்தைப் பெற்றார். அதன் பிறகு இவர் நடித்த சுந்தரபாண்டியன், குட்டி புலி, மஞ்சப்பை கடைசியாக இவரின் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 போன்ற படங்கள் இவருக்கு தனி அடையாளத்தை பெற்று கொடுத்தது.

தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் பிஸியாக நடித்து வந்த லட்சுமி மேனன் அந்த சமயத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று தன்னுடைய மேற்படிப்பதற்காக சினிமாவில் இருந்து விலகினார். இந்நிலையில் தற்போது லட்சுமி மேனன் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மதுபான விடுதியில் நடிகை லட்சுமி மேனன் தரப்புக்கும், ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதலை தொடர்ந்து ஐடி ஊழியரை காரில் கடத்தி சென்று லட்சுமி மேனன் தரப்பு தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த ஐடி ஊழியர் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் லட்சுமி மேனுடன் மதுபான விடுதிக்கு வந்திருந்த மூன்று பேரையும் கைது செய்தது போலீஸ், விசாரணைக்கு அழைத்த நிலையில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகிவிட்டதாக எர்ணாகுளம் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

#image_title

விசாரணை போது, மதுபான விடுதியில் மது அருந்தும் போதும் ஐடி ஊழியருக்கும் லஷ்மி மேனன் தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்துள்ளது. இதில் கடுப்பான லக்ஷ்மி மேனன் கேங் ஐடி ஊழியரை கடத்தி தாக்குதல் நடத்தி பழிவாங்கி இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் நடுரோட்டில் குடிமி பிடி போடும் சண்டை காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் லட்சுமி மேனன் கூடிய சீக்கிரமே எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜராகி சம்பவத்திற்கான விளக்கத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் லட்சுமி மேனன் நண்பர் மிதுன் மோகன் பல்வேறு கடத்தல் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கூலிப்படையாக செயல்படும் மிதுன் மோகனுடன் லட்சுமிமேனனுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது என கேரளா போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.‌ இந்த தீவிர விசாரணையில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.