ஆர்டின் விட்டு காதலை சொன்ன நிவேதா பெத்துராஜ்!.. காதலர் யார் தெரியுமா?..
Nivetha Pethuraj: சொந்த ஊர் தமிழ்நாடு என்றாலும் துபாயில் செட்டில் ஆனவர் நிவேதா பெத்துராஜ். ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன், பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.

தெலுங்கு சினிமாவிலும் பல படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். தமிழில் இவருக்கு அதிக வாய்ப்புகள் அமையவில்லை. கடைசியாக தமிழில் Boo என்கிற படத்தில் நடித்திருந்தார். ஒரு அரசியல் வாரிசோடு இவரை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியானது. அந்த அரசியல் வாரிசு இவருக்கு துபாயில் பல கோடி மதிப்புள்ள வீடு ஒன்றை வாங்கி கொடுத்திருப்பதாகவும் சிலர் சொன்னார்கள். ஆனால் அதை மறுத்தார் நிவேதா பெத்துராஜ்.
சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் ஃபார்முலா ஒன் கார் பந்தயங்களில் கலந்து கொள்வது, பேட்மிட்டன் விளையாடுவது என பல விஷயங்களிலும் இவருக்கு ஆர்வம் உண்டு. இந்நிலையில் தன்னுடைய காதலனை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறார் நிவேதா. அவரின் பெயர் ரஜித் இப்ரான்.

இவர் ஒரு தொழிலதிபர் மற்றும் மாடலிங் துறையை சேர்ந்தவர் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த வருடம் இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருவருக்கும் ரசிகர்களும் திரை துறையை சேர்ந்த பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


