Tourist Family: டூரிஸ்ட் ஃபேமிலி டைரக்டரை தட்டி தூக்கிய ரஜினிகாந்த் குடும்பம்… ஆனா இங்க கதையே வேற!
Tourist Family: தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் வெற்றியை பெற்ற டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டைரக்டரை தன் பக்கம் தூக்கி இருக்கிறது ரஜினிகாந்த் குடும்பம். ஆனால் இதன் பின்னணி தான் சுவாரஸ்யமாக இருக்கிறது.
ஒரு சின்ன தெருவை வைத்துக்கொண்ட சின்ன பட்ஜெட் நடிகர்களுடன் சசிகுமார், சிம்ரனை இறக்கி ஒரு கதையை சொன்னது டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
ஓவர் டிராமா எதுவும் இல்லாமல் சாதாரண கதையை மையமாக வைத்து படத்தில் ஒரு சின்ன ரோலை ஏற்று அதில் வெற்றியும் கண்டார் படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த். அப்படம் வெளிவந்த பின்னர் அடுத்து யாரை இயக்குவார் என பல எதிர்பார்ப்புகள் இருந்தது.

ஆனால் ஆச்சரியம் தரும் வகையில் தற்போது அவரின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளிவந்து இருக்கிறது. ஆனால் இந்த முறை டைரக்ஷன் இல்லை. ஹீரோவாக நடிக்க இருக்கிறார். ஹீரோயினாக அனஸ்வர ராஜன் நடிக்கும் இப்படத்தினை புதுமுக இயக்குனர் மதன் இயக்குகிறார்.
இப்படத்தின் சவுந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய ஜியான் ஃபிலிம்ஸுடன் இணைந்து மகேஷ்ராஜின் எம்ஆர்பி நிறுவனத்துடன் தயாரிக்க இருக்கிறார். இப்படத்திற்கு பல மொழிகளில் வெற்றிக்கண்ட ஷான் ரோல்டனை இசையமைக்க அழைத்து வருகின்றனர்.

அபிஷன் என்பதால் கதை கண்டிப்பாக சரியாக தேர்வு செய்திருப்பார். அந்த வகையில் இப்படத்தின் மற்ற குழு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் படத்தின் டைட்டில் உள்ளிட்ட விஷயங்கள் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இப்படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


