Kushboo SundarC: இரண்டு மகளையும் ஒன்னா களமிறக்கும் குஷ்பு சிந்தர்.சி… ஆனா இந்த விபரீத விளையாட்டு தேவையா?

Kushboo SundarC: நடிகை குஷ்பு தன்னுடைய மகள்களை ஒரே நேரத்தில் கோலிவுட்டில் களமிறக்குவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

தமிழ் சினிமாவில் தன்னுடைய துள்ளலான நடிப்பில் கவர்ந்தவர் நடிகை குஷ்பு. முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்தார். ஒரு கட்டத்தில் 90களின் முக்கிய நடிகையாக தமிழ் சினிமாவில் உயர்ந்தார். 

பின்னர் இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்துக்கொண்ட பிறகு கூட சினிமாவில் இருந்து விலகாமல் தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். தன்னுடைய அவ்னி புரொடக்‌ஷன் மூலம் முக்கிய படங்களை தயாரித்து வந்தார். 

Kushboo

தயாரிப்பு ஒரு பக்கம், நடிப்பு ஒரு பக்கம் என பிஸியாகும் இருக்கும் குஷ்பு சமீபகாலமாக தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்தார். அவருடைய தேகத்தில் வித்தியாசமான மாற்றத்தை காட்ட ரசிகர்களே அசந்து போயினர். 

இதில் குஷ்புவின் இரண்டு மகள்களான அவந்திகா, ஆனந்திகாவும் திடீரென உடல் எடையை குறைத்து ஆச்சரியப்படுத்தினர். இதில் அவந்திகா நடிகையாக ஆசைப்படுவதாக ஏற்கனவே தகவல் கசிந்தது. தற்போது அதற்கான விஷயங்களும் வெளியாகி இருக்கிறது. 

சுந்தர்.சி தன்னுடைய நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கும் படத்தில் அவந்திகா ஹீரோயினாக நடிக்க அவரின் இளைய மகள் ஆனந்திகா இயக்க அறிமுகமாக இருக்கிறார். இந்த வாரிசு கூட்டணி தற்போது கோலிவுட்டில் விவாத பொருளாகி இருக்கிறது. 

ஏற்கனவே வனிதா விஜயகுமார் நடிப்பில் அவரின் மூத்த மகள் ஜோவிகா தயாரிப்பில் எண்ட்ரி கொடுத்து இருந்தார். அது விவாத பொருளாகி இருக்கும் நிலையில் தற்போது இந்த தகவலும் ரசிகர்களிடம் கேள்விகுறியாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.