சிவகார்த்திகேயனை குறி வைத்த வெற்றிமாறன்.. தடைகளை தகர்த்து சொல்லி அடித்த பேட் கேர்ள்
தமிழ் சினிமாவின் முன்னணியில் இயக்குனர்களில் ஒருவர் வெற்றி மாறன். அவரின் உதவியாளர் வர்ஷா பரத் இயக்கியுள்ள திரைப்படம் தான் ”பேட் கேர்ள்”. இந்த படத்தை வெற்றி மாறனுடன் இணைந்து பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யம் இணைந்து தயாரித்துள்ளார். படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் இவர்களுடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், டிஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை அமித் த்ரிவேடி அமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது, அதில் ஒரு டீனேஜ் பெண் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் இந்த உலகத்தில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள் இச்சைகளை அவள் எப்படி எதிர்கொள்கிறாள்? அதை எப்படி பார்க்கிறாள்?.

அதை எப்படி அனுபவிக்கிறாள்? என்பதைப் பற்றி இப்படம் எடுத்துரைக்கிறது. இதன் டீசர் வெளியான அன்று சிறுவர், சிறுமிகள் ஆபாசமாக இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றதால் அதனை இணையதளத்திலிருந்து நீக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் பலர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது பெண்ணியம் குறித்து பேசவில்லை, ஆனால் அதற்கு பதிலாக தேவையற்ற ஆபாச காட்சிகள் நிறைந்து இருப்பதாக அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள்.
நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த மனுவை நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டார். இந்த படத்தின் மீது வழக்கு தொடர்ந்து நடந்து வந்ததால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் படம் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு பல எதிர்ப்புகளும் பல தடைகளும் வந்த நிலையில் ஒரு வழியாக இந்த படத்திற்கு விடிவு காலம் வந்துவிட்டது.

ஏற்கனவே செப்டம்பர் ஐந்தாம் மாதம் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் அந்த படத்துடன் வெற்றிமாறன் தயாரித்த பேட் கேர்ள் படத்தையும் ரிலீஸ் செய்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் சிவகார்த்திகேயன் படத்திற்கு இதனால் சிறிது மவுஸ் குறையலாம்.
ஏனென்றால் படத்தின் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் வெற்றி படம் கொடுத்து சில ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் இந்த படத்தையும் சொதப்பிவிட்டால் மறுபுறத்தில் பேட் கேர்ள் படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் இந்த படத்திற்கான திரையரங்குகள் அதிகரிக்கப்படும். இதுபோல கேபிஒய் பாலா நடிக்கும் காந்தி கண்ணாடி படமும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


