மார்க்கெட் இருந்தபோதே தடம் மாறிய லட்சுமி மேனன்!.. போதைக்கு அடிமையானதன் பின்னணி!..

Lakshmi Menon: கேரளாவை சேர்ந்தவர் லட்சுமி மேனன். 2011ம் வருடம் முதல் சினிமாவில் நடித்து வருகிறார். துவக்கத்தில் மலையாள படத்தில் நடித்த இவர் 2012ம் வருடம் வெளியான சுந்தரபாண்டியன், கும்கி, குட்டிப் புலி ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். தொடர்ச்சியாக 3 படங்கள் ஹிட் அடிக்கவே கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக லட்சுமிமேனன் மாறினார்.

தொடர்ந்து பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்தார். கார்த்தியுடன் கொம்பன், ஜெயம் ரவியுடன் மிருதன், விஜய் சேதுபதியுடன் றெக்க ஆகிய படங்களில் நடித்தார். றெக்க படத்திற்கு பின் இவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது.

இடையில் நடிகர் விஷாலுடன் இவர் கிசுகிசுக்கப்பட்டார். லட்சுமி என பெயர் கொண்ட ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றெல்லாம் விஷால் அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இவருக்கும் விஷாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் ஆனால் அது திருமணத்தில் முடியவில்லை எனவும் சொல்லப்பட்டது.

#image_title

சில வருடங்கள் கழித்து சந்திரமுகி பார்ட் 2-வில் நடித்திருந்தார். மேலும் ஈரம் பட இயக்குனர் அறிவழகனின் சப்தம் படத்திலும் நடித்திருந்தார். தற்போது மழை என்கிற படத்தில் இவர் நடித்து வருவதாக செய்திகள் வெளியானது. இப்போது மார்க்கெட் இல்லாத நடிகையாக இருக்கும் லட்சுமிமேனன் பற்றியே இன்று காலை முதல் பரபரப்பு செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.

மது போதையில் நண்பர்களுடன் சேர்ந்து ஐடி ஊழியர் ஒருவரை தாக்கியதோடு அவரை காரில் கடத்தியது தொடர்பாக இவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக லட்சுமிமேனனின் ஆண் நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் லட்சுமிமேனன் தலைமறைவானார். அதோடு கடத்தப்பட்ட அந்த நபரின் காரின் முன்பு மது போதையில் லட்சுமிமேனன் அலப்பறை செய்யும் வீடியோவும் வெளியானது. தற்போது அவர் முன் ஜாமின் கேட்டு விண்ணப்பிக்க ஒரு வாரம் அவரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

நல்ல மார்கெட் இருந்த நிலையில் கோலிவுட்டில் பல வருடங்கள் நீடிப்பார் என பலரும் நினைத்தார்கள். ஆனால் ஒரு மாஸ் ஹீரோவின் தங்கையாக நடித்த படத்தில் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் தொடர்பான ஒரு பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு அவரோடு நெருக்கமாகி போதைப் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன்பின் தொடர்ந்து நண்பர்களுடன் இரவு நேரங்களில் பார்களுக்கு செல்லும் பழக்கம் லட்சுமிமேனனுக்கு ஏற்பட்டிருக்கிறது, அதுதான் இப்போது கைது வரைக்கும் சென்றிருக்கிறது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.