துச்சாதனன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விவா பிலிம்ஸ், வி.ஜி.ஸ்டுடியோஸ் மற்றும் தாய் திரையரங்கம் இணைந்து தயாரிக்கும் துச்சாதனன் திரைப்படம் செப்டம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
விவா பிலிம்ஸ், வி.ஜி.ஸ்டுடியோஸ் மற்றும் தாய் திரையரங்கம் இணைந்து தயாரிக்கும் படம் துச்சாதனன். இந்த படத்தில் விகாஷ், ரோகிணி,சிங்கம்புலி, தமிழ் செல்வி, மணிமாறன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி தளபதி என்ற இயக்குனர் இயக்கியுள்ளார். இசை விஜய் பிரபு, படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகள் ராக்கி ராஜேஷ் . இவர் கேப்டன் விஜயகாந்தின் பல படங்களுக்கு சண்டை மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.
இப்படம் குறித்து இயக்குனர் தளபதி கூறியபோது,
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள், படிக்க வைக்கிறார்கள், சொத்து சேர்த்து வைக்கிறார்கள். ஆனால் பெற்றோரும், பள்ளிகளில் பாடம் சொல்லிதரும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு ஒழுக்கமாக வாழ்வது எப்படி என்பதை கற்றுத் தர தவறி விடுகின்றனர். சமூகத்தில் இன்று நடக்கும் அவலங்களுக்கும் காரணம் ஒழுக்கக் கேடுதான். அப்படி ஒழுக்கக் கேட்டால் நடந்த விபரீதமும், அதற்கு காவல்துறை எடுத்த நெஞ்சைப் பதறவைக்கும் நடவடிக்கை என்ன என்பதே படத்தின் கதை என்று கூறினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


