சூரியின் பிறந்த நாள் ஸ்பெஷல் கிஃப்ட்.. மண்டாடி பட ஃப்ரெஷ் அப்டேட்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூரி. சினிமா மீது உள்ள ஆசையின் காரணமாக மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். 90களின் காலகட்டத்தில் சினிமாவுக்காக அவர் செய்யாத வேலைகளே கிடையாது. அயராது பாடுபட்டு வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் மக்களின் கவனத்தை பெற்றார். அதன் பிறகு பரோட்டா சூரி என்று இவரின் அடையாளமாக மாறியது.

அதன்பிறகு தொடர்ந்து காமெடியில் கலக்கி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உயர்ந்தார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கோலோற்றி கொண்டிருக்கும் சமயத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதால் தொடர்ந்து கொட்டுக்காளி, கருடன், விடுதலை-2, மாமன் எனக்கதையின் நாயகனாக சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறார்.

#image_title

இந்நிலையில் சூரியின் அடுத்த படமான ”மண்டாடி” ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

இன்று சூரியின் பிறந்தநாள் என்பதால் மண்டாடி பட குழு அவருக்கு சிறப்பு போஸ்டர் ரெடி செய்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அந்த போஸ்டரில் சூரி ஆக்ரோஷமான தோற்றத்துடன் இருப்பது போல் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து வரும் சூரி இந்தப் படத்திலையும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என்பது தெரிகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.