Sullansethu Teaser: இது எந்த ரகம்னே தெரியலயே! முத்தையா மகனின் முரட்டு சம்பவம்.. வெளியான ‘சுள்ளான் சேது’ டீஸர்

Sullan Sethu Teaser: குட்டி புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா, அவருடைய மகன் விஜய் முத்தையா இப்போது ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். அவர் நடிக்கும் சுள்ளான் சேது படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த படத்தை முத்தையாவே இயக்கியிருக்கிறார். குட்டி புலி படத்திற்கு பிறகு கொம்பன், மருது, தேவராட்டம் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார் முத்தையா.

கிராமப்புற மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி படங்களை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக அக்கா பாசம், அப்பா பாசம், மாமனுக்கு மருமகனுக்குமான உறவு என குடும்பங்களை கொண்டாட வைக்கும் படமாகவே அவர் இதுவரை எடுத்திருக்கிறார். அவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் விருமன் போன்ற படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

ஆனால் முன்னணி ஹீரோக்களை வைத்து அவர் படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது தன்னுடைய மகனையும் இப்போது ஹீரோவாக்கி அழகு பார்த்திருக்கிறார். சுள்ளான் சேது என பெயரிடப்பட்ட அந்த படத்தில் பரத் வில்லனாக நடிப்பதாக தெரிகிறது .மதுரை தானாவாக பரத் அந்த படத்தில் நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். விஜய் முத்தையாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் பிரிகிடா சகா நடிக்கிறார்.

எம் சுகுமார் ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை கேகே ஆர் சினிமாஸ் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது சுள்ளான் சேது திரைப்படம். இந்த படத்தில் விஜய் முத்தையா பள்ளி மாணவனாக நடித்திருக்கிறார். கூடா நட்பு கேடில் முடியும் என்பதற்கு ஏற்ப நண்பர்களுடன் சேர்ந்து கலாட்டா செய்வது, பாரில் ஆட்டம் போடுவது என ஒரு கட்டத்தில் அவரும் வன்முறையில் இறங்குவதாக இந்த டீஸரில் காட்டப்பட்டிருக்கிறது.

படத்தின் டீஸர் மக்களை பெரிய அளவில் ஈர்த்திருக்கிறது என்றே சொல்லலாம். ஒரே குடும்ப பாசத்தை மையப்படுத்தி எடுத்து வந்த முத்தையா எப்போது இப்பொழுது உள்ள ட்ரெண்டிற்கு மாறுவார் என எதிர்பார்த்த நிலையில் அதற்கு சரியான பதிலடி கொடுக்கும் படமாக இந்த சுள்ளான்சேது திரைப்படம் அமையும் என டீஸரை பார்க்கும் பொழுதே தெரிகிறது. அந்த அளவுக்கு வன்முறை கொட்டி கிடைக்கிறது. டீஸர் வெளியானதிலிருந்து மக்கள் தொடர்ந்து ஆதரவு தந்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.